பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டமே தம்மை இந்த முடிவை எடுக்குமாறு தூண்டியதாக அவர்கள் கூறுகின்றனர். இங்கு கிராமத்தில் நமக்குக் கேளிக்கை வசதிகளுக்கு ஒன்றும் குறைவு இல்லை. நகரத்தில் இருப்பதைக் காட்டிலும் இங்கு அந்த வசதிகள்' மிகவும் அதிகமாக இல்லை என்பது உண்மைதான். என்றாலும், மிகவும் அடிக்கடி இங்கு வந்து நாடக நிகழ்ச்சிகளை நடத்திவரும் முழுமையான் நாடகக் கம்பெனி களை நாம் கொண்டிருக்காவிட்டாலும், நாமும் நாடகக் குழுக்களைப் பெற்றுத்தான் இருக்கிறோம். மேலும் ராஸ்தாவ் வாத்திய சங்கீதக் கழகமும் நல்ல பணியை ஆற்றி வருகிறது; அதன் இசைவாணர்கள் அவ்வப்போது இங்கு வந்து நம்மை மகிழ்விக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்..' நமது அண்டையிலுள்ள வால் காகிராடு ம ற் று ம் வோரோனே ஷ் , பிராந்தியங்களில் , நிலவி வரும் கலாசார வாழ்க்கையிலும் இதே . நி லை ைம் ைய க் காணலாம். வோரோனேஷ் பாடகர் கோஷ்டி அந்தப் பிராந்தியத்தில் நன்கு பணியாற்றி வருகிறது. வால்கா கிராடுப் பிராந்தியம் உர் யுப் பின்ஸ்க்கில் தனது , ெச ா ந் த. நாடக அரங்கைக் கொண்டுள்ளது. அது ஒரு நடமாடும் நாடக அரங்காகும்; அது ஆண்டின் தொடக்கத்தில் தனது வட்டாரச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி, டிசம்பர் மாத வாக்கில் அதனைப் பூர்த்தி செய்கிறது; அதற்குள் அது அந்தப் பிராந்தியம் எங்கணும் பயணம் செய்து முடித்து விடுகிறது.

  • நீங்களே கண்டுகொள்ள முடிவது போல், நிலைமைகள்

மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. . உதாரண மாக, என்னைப் பொறுத்த வரையில் நான் கலாசாரத்திலிருந்து மிகவும் தூர விலகி,. எங்கோ வசித்துக் கொண்டிருப்பதாக நான் கருதவே இல்லை, குறைந்த பட்சம் நான் என்றுமே அவ்வாறு உணர்ந்ததே கிடையாது (ஒருவேளை இது நான் செய்து வரும் வேலையின் தன்மையின் காரணமாகவும் இருக்கலாம்). - சுருங்கக் கூறின், பின்வரும் விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறித்தான் ஆக வேண்டும்: விவசாயத் திறமை நமது நாட்டுக்கு மிகவும் முக்கியான, மிகவும் தேவைப்படுகின்ற ஒரு திறமையாகும்; எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்தாக வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது, 423