பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண் திருப்தி. இந்த ", - இனி நாம் கலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குச் செல்வோம். எனது சொந்தத் திட்டங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற எனது நாவலை நான் எழுதி முடித்துவிட விரும்புகிறேன். அதன்பின் நான் நாடகக் கலையில் எனது திறமையை முயன்று பார்க்க நான் விரும்புகிறேன். இந்த விஷயம் பற்றிக் கூறும்போது, இந்த இலக்கிய வகை விஷயத்தில் நமது நிலைமைகள் திருப்திகரமாக இல்லை என்பதை நான் கூறித்தானாக வேண்டும். நமது இளைஞர்களுக்குக் கல்வி போதனைச் செய்யும் ஒரு செல்வாக்கை செலுத்தக் கூடிய, நமது காலத்தவரையும் நமது இளம் உழைக்கும் மக்களையும் பற்றிய நல்ல நாடகங்கள் நம்மிடம் மிக மிகக் குறைவாகவே உள்ளன, சினிமாவை எடுத்துக் கொள்வோம். எனது அபிப் பிரா!!த் தில், எனது படைப்புக்களின் மிகவும் வெற்றிகரமான திரைப் படத் தயாரிப்பு, பிரபலமான நடி.கரும் டைரக்டருமான செர்கி பொந்தார்சுக் தயாரித்த ஒரு மனிதனின் தலைவிதி என்ற திரைப்படமேயாகும். டான் நதி அமைதியாக ஓடுகிறது, கன்னி நிலம் உழப்பட்டது ஆகிய திரைப்படங்களைப் பொறுத்தவரையில், அவற்றில் திரைக்கதை வசன கர்த்தாக்களும் டைரக்டர்களும் சில தவறுகளை இழைத்துள்ளனர். உதாரணமாக, டான் நதி அமைதியாக ஓடுகிறது என்ற படத்தில், அதில் இடம் பெற்றிருக்க வேண்டிய சில உயிர்த்துடிப்பு மிக்க சம்பவங்கள் விடுபட்டுப் போயின; அதே சமயத்தில் அவை இல்லாவிட்டாலும் படம் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டிராது என்று சொல்லக் கூடி3, படத்துக்கு அநாவசியமான சில நிகழ்ச்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தன, அதன் திரைப்படக் கதையை செர்ரி கெராசிமோவ்தான் எழுதினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அது அவரது சொந்தப் படைப்பாக்க விவகார மாகவே இருந்து விட்டது. மேலும் நடிகர்களின் நடிப்பும் அத்தனை மகிழ்ச்சி தருவதாக இல்லை. இப்போது 'மாலி நாடக அரங்கு டான் நதி அமைதியாக ஓடுகிறது நாவலை நாடகமாக்கி நடத்த முயன்று வருகிறது, அவர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற நாவலை நாடகமாக்கி மேடையேற்றுவது பற்றிச் சிந்தித்துவரும் நாடக அரங்குகளைப் பொறுத்த வரையில், அவை மிகவும் அவசரப்படு கின்றன என்பதே எனது அபிப்பிராயமாகும்; ஏனெனில், ஒரு பூர்த்தியடையாத நாவலிலிருந்து நாடக ரீதியில் முழுமை யான தும் ஒருங்கிணைந்ததுமான ஒரு நாடகத்தை உருவாக்கு து மிகவும் கடினமாகும்.