பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஸ்தாவிலுள்ள கார்க்கி நாடக அரங்கம் படைப்பிரிவு வந்து கொண்டிருக்கிறது என்ற எனது கதையின் அடிப்படையில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முயன்று வருகிறது. ஆயினும், அதில் ஒரு பெண் பாத்திரத்துக்குக் கூட இடமில்லாதபோது, அது எத்தகைய நாடகமாக இருக்க முடியும்?. அவர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற எனது "நாவலை மேலும் தொடர்ந்து எழுதவொட்டாமல் என்னை முடக்கியுள்ள ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பம் நிகழ்ந்துள்ளது', ராஸ்தாவில் நான் ஜெனரல் லுகினைச் சந்தித்தேன்; அவர் இப்போது ஓய்வு பெற்றோர் பட்டியலில் இடம் பெற்றவராக இருந்து வருகிறார். இந்த மனிதரின் வாழ்க்கை ஒரு சோகமய மான கதையாகும். காயம்பட்டு நினைவிழந்து போன இவரை ஜெர்மானியர்கள் கைதியாக்கிக் கொண்டு சென்றனர். அவர் உறுதியும் துணிவாற்றலும் மிக்க மனிதராக, உண்மையான தேசபக்தராக இருந்து வந்தார். தமது நாட்டைக் காட்டிக் கொடுத்தவரும், எதிரிகளின் பக்கம் போய்ச் சேர்ந்து கொண்ட வருமான முன்னாள் ஜெனரல் விளாசோவ், தமது நா ஜி மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில், தம்மோடு சேர்ந்து கொள்ளுமாறு லுகினையும் மனம் மாற்ற முயற்சி செய்தார்; ஆனால் லுகினோ அதற்கு உடன்படாமல் உறுதியாக நின்றார். அவர் என்னிடம் எவ்வளவோ சுவைமிக்க விஷயங்களைக் கூறினார்; அவற்றில் சிலவற்றை நான் எனது நாவலில் பயன் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாஜி ஜெர்மனியின்மீது சோவியத் மக்கள் பெற்ற வெற்றியின் வரவிருக்கும் 20 ஆவது ஆண்டுவிழா சம்பந்தமாக பத்திரிகைகள் யுத்தத்தைப் பற்றிய பல கட்டுரைகளையும், கதைகளையும், பிற விஷயங்களையும் வெளியிட்டு வருகின்றன: மாபெரும் தேசபக்தப் போரின்போது சண்டையில் வீழ்ந்து பட்டவர்களின் நினைவுச் சின்னங்களையும் கல்லறைகளையும் கெளரவமாகப் போற்றிப் பாதுகாத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொள்வது நமது இளைஞர்களின் கடமையாகும். " ' ' இளைஞர் களுக்குக் கல்வி போதிப்பது மிகவும் முக்கியமான தொரு பணியாகும். பிள்ளைப் பருவத்திலிருந்தே அவர்களிடம் வேலை செய்யும் பழக்கங்களை வளர்த்துவர வேண்டும். நான் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசுக்குச் சென்றிருந்த போது, ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கு வயலில் ஒரு குடும்பமே-தாய், பாட்டி, சுமார் ஒன்பது வயதான ஒரு சிறுவன் ஆகிய .. அனைவருமே-களைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர்கள் ஒவ்வொரு களைச்செடியையும் பிடுங்கி