பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிவதற்காக, உண்மையில் தமது முழங்கால்களை ஊன்றியே அந்த, வய லில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தனர். நமது இளம் மக்களை வேலை பார்க்க வைப்பதில், சில சமயங்களில் நமக்கு மிகவும் சிரமமாகத்தான் உள்ளது. காம்சொமால் இந்தத் திசைவழியில் தான் தனது நடவடிக்கைகளைச் செலுத்தி வரவேண்டும்; தற்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில், குடும்பத்திலும் பள்ளிக்கூடத்திலும் வேலைக் கல்வியின் திறனை அதிகரித்து வர வேண்டும்...... 1965 எப்போதும் தேசபக்தி மிக்கவராக இருங்கள் : (தாகெஸ்தான் பள்ளி மாணவிகளோடு நடத்திய ஓர் உரையாடலிலிருந்து) . up. எம். முர்துஜலீயேவா, ஒரு விடுதிப் பள்ளியின் தலைமை ஆசிரியை : தாகெஸ்தான் மாதர்கள் பலர் பொது ஸ்தாபனங் களில் பணியாற்றுகிறார்கள், அவர்கள் மத்தியில் பள்ளி ஆசிரியைகளும், விஞ்ஞானிகளும், பிற நிபுணர்களும் உள்ளனர், என்றாலும் கூட பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ள தப்பெண்ணங்கள் இன்னும் முற்றிலும் டோக்கப்பட்டு விட வில்லை. அவை மிகவும் விடாப்பிடியாக நீடித்து வருகின்றன... 4 எம். ஏ. ஷோலகோல்: நாட்டின் பொதுவான கலாசார அபிவிருத்தி வேகமாக முன்னேறி வருகிறது என்பது உண்மை யாயினும்கூட, இது உண்மையில் ஒரு சிரமமான பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதனால் நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது; அவ்வாறு இருந்தால், இந்தப் பிற்போக்கான போக்குகள் மேலும் தலை தூக்குவதற்கே ஏதுவாகும். நீங்கள் நாசூக்கான, சாமர்த்தியமான வழிகளை மேற்கொண்டு, மத-விரோதமான கருத்துக்களைப் பரப்புவ தன் மூலமும், எது சரி, எது தவறு என்பதைப் புரிந்து கொள்ள மக்களுக்கு உதவுவதன் மூலமுமே அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும், அஸ்ஸியாத் அலகோவா, ஒரு பள்ளி மாணவி: நமது இன்றைய வாழ்க்கையில் வீரச் செயல்களைப் புரிய முடியுமா? - எம்.ஏ, ஷோலகோவ்; வாழ்க்கையை நல்ல விதமாகவும், சமு தாயத்துக்குப் பயன்மிக்க முறையிலும் வாழ்வதும் ஒரு வீரச் செ யல் தான். ஒரு நல்ல காம்சொமால் உறுப்பினராக இருந்து வரு வதும்-சிறிய வீரச்செயல் என்றாலும்கூட-அதுவும் ஓர் அன்றாட வீரச்செயல்தான். அருமைக் குழந்தைகளே, சோவியத் 428