பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைமையாக ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை மேற்கொள்ளக் கூடிய அத்தகைய மக்களாக . உங்களை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது. மக்களிடம் சிசுப்பருவத்திலிருந்தே, கிண்டர்கார்டன் வயதிலிருந்தே தேசபக்தியை ஊட்டி வளர்த்து வரவேண்டும், அப்போதுதான் அது ஒரு மனிதனின் மனோபாவத்தில் ஊறிப் போயிருக்கும். அப்போது தான் அவன் எந்தச் சோதனைகளைக் கண்டும் அஞ்சாதவனாக இருப்பான்; அப்போது தான் அவன் தனது நாட்டின்பாலும் கட்சியின் பாலும் கொண்டுள்ள விசுவாசத்தையும், கம்யூனிசக் கருத்துக்களைக் காட்டிலும் மேலும் விவேகமிக்க, மேலும் புதுமையான, மேலும் மனிதத் தன்மை மிக்க கருத்து ஏதும் "உலகில் இல்லை என்ற தனது அசைக்க முடியாத திடமான கருத்தையும் வாழ்நாள் முழுவதிலும் கொண்டு செ லுத்து வான். 1965 சோவியத் எழுத்தாளர்களது நாலாவது காங்கிரசில் ஆற்றிய உரையிலிருந்து அன்பார்ந்த பிரதிநிதித் தோழர்களே! எங்களது மதிப்புக்குரிய விருந்தினர்களே! காங்கிரசின் முதல் நாட்களைக் கொண்டு தீர்மானிக்கும்போது, நமது தோட்டத்தில் எல்லாமே அருமையாக உள்ளன: கடுமை யான விமர்சனமோ, அநாவசியமான படபடப்போ எதுவும் இருக்கவில்லை; எல்லாமே அருமையாகவும், அமைதியாகவும் இருந்துள்ளன; வரப்பிரசாதம் போன்ற சாந்தி யு ம் நல் லிணக்கமுமே ஆதார சுருதியாக விளங்கின; இதன் விளைவாக ஒவ்வொருவரது சுவாசமும், அற்புதமான தாளலயத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறது; புன்னகைகள் அருள் பாலிப்பவை யாக உள்ளன ; இங்குள்ள நபர்களிற் சிலர். ஏற்கெனவே சுகமாகத் தூங்கத் தொடங்கிவிட்ட அளவுக்கு, பொது வான சூழ்நிலை அத்தனை சாந்தமாக உள்ளது.....' இந்தக் காங்கிரசுக்கான அடிப்படைக் காரியங்களை மேற் கொண்டு முடிப்பதில் எழுத்தாளர் யூனியனின் தலைமை பெரும் சிரமங்களை மேற்கொண்டது என்பது தெளிவு. இதற்கு இயல் பாகவே அவர்கள் நமது நன்றிக்கும்' நமது பாராட்டுக் களுக்கும் உரியவர்களாவர். . முந்தைய காங்கிரசுகளில் நிலைமைகள் ஓரளவுக்கு - வே று விதமாகவே இருந்தன என்பதையே நான் நினைவு கூர்கிறேன்: 429