பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடத்தை வகிக்கவும் தொடங்கியுள்ளன. சமீப ஆண்டுகளில் இளைஞர்களோடு அவர் கொண்டுள்ள நேர்முகத் தொடர்புகள் மிகவும் தீவிரமடைந்துள்ளன; சோவியத் இளைஞர்களின் மிகவும் நானாவிதமான பிரிவினருக்கும் எழுதும் முகமாக அவர் எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் அடிக்கடி வெளிவந்து கொண் டிருக்கின்றன. 1920 ஆம் ஆண்டு களிலும் 1930 ஆம் ஆண்டுகளிலும் ஷே:7லகோவ் மேற்கொண்டிருந்த இலக்கிய நடவடிக்கையின் சில அம்சங்களைச் சுருக்கமாகப் பார்ப்பது, இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பயன் தருவதாகும். முதலில் வெளிவந்த அவரது எழுத் துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் "பரிசோதனை, “'மூவர்” < 'அரசாங்க இன்ஸ்பெக்டர்' என்ற பத்திரிகைகளில் எழுதிய நையாண்டி நடைச்சித்திரங்கள் அனைத்தும், 1920 ஆம் ஆண்டு களின் தொடக்கத்தில் சோவியத் இளம் மக்களது வாழ்க்கை போடு சம்பந்தப்பட்டதாகவே உள்ளன. ' 1938 வாக்கில், அப்போது 33 வயதை எட்டியிருந்த ஷோல கோவ், இரண்டு சிறு கதைத் தொகுதிகள் , டான் நதி அமைதி2எக ஓடுகிறது என்ற நாவலின் மூன்று பாகங்கள், கன்னி நிலம் உழப் பட்டது என்ற நாவலின் முதற் பாகம் ஆகியவை வெளிவந்ததைத் தொடர்ந்து உலகப் புகழ் பெற்றிருந்தார். ஒரு மூத்த சகோதரர் என்ற முறையில், வேடிக்கையாகத்தான் என்றாலும், மீண்டும் இளைஞராக மாற்ற விரும்பிய ஒருவர் என்ற முறையில், காம் சொமால் வயதை எட்டியிருந்த இளம் மக்களிடம் பேசுவதற்கு அவருக்கு உரிமையும் இருந்தது; ஓரளவுக்குக் கடமையும் இருந்தது : அன்பார்ந்த சோவியத் யுவர்களே! யுவதிகளே! காம்சொ? மால் தனது இருபதாவது பிறந்த தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது; இது நான் தவறவிட முடி யாத ஒரு சந்தர்ப்பமாகும். குதூகலித்துக் களிக்கும் இளம் மக்களின் கூட்டமொன்றைக் கடந்து செல்லும் ஒரு வயதான மனிதர், ஒரு கணம் நின்று அதனைப் பார்ப்பார்; அக் கார்டியன்" வாத்தியத்தில் வாசிக்கப்படும் கீதத்தை அவர் கேட்கும் போதும், அந்த மகிழ்ச்சி பொங்கும் இளம் முகங்களை அவர் புன்னகை த வழ நோக்கும்போதும், தாமே பல ஆண்டுகள் இளையவராகி விட்டவர் போல் அவர் உணர்கிறார். என் விஷயமும் அப்படித் தான். என் அன்பார்ந்த வாசகர்களே, உங்களைப்பற்றி நினைப்பதன் மூலமே நானும் இளைஞனாகிவிட்டதுபோல் உணர்கிறேன்; அதே.

சமயம் எனக்கு ஏற்கெனவே முப்பத்தி மூன்று வயது ஆகிவிட்டதா

38