பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமும் அடிக்கடி கால் தடுக்கி விழாமல் இருப்பதற்காக வருங் காலத்தைப் பற்றியே சிந்திப்போம், இந்தக் காங்கிரசின் மனோநிலை , அமைதியாகவும் காசியார் த்தம் மிக்கதாகவும் இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், என்றாலும் அதே சமயத்தில், நமது யூனியனின் தலைமையானது சகல இக்கட்டான விஷயங்களையும் எப்பாடு பட்டேனும் தவிர்த்துவிட வேண்டும் என்று ஒளிவு மறைவற்று விரும்புவதைக் கண்டு நான் சற்றே கவலை கொண் டுள்ளேன். இவ்வாறு செய்வது முற்றிலும் நியாயமாகத் தோன்றவில்லை. எவ்வாறாயினும் இந்தக் காங்கிரஸ் மகிழ்ச்சி கரமாகவே முற்றுப் பெறும்; ஆயினும், என்னதான் இருந்தாலும் நாம் ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் திரும்பவும் கூடியுள்ளோம்; எனவே முற்றிலும் இலக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், பணிகள் ஆகியவை போக, நாம் பேசிக் கொள்வதற்கு மேலும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன, நான் யூனியனின் தலைமைப்பீடத்தில் இடம் பெற்றிருக்க வில்லை; உத்தரவுகளை எவ்வாறு பிறப்பிப்பது என்பதை அறியாத ஒரு சாதாரண உறுப்பினர்-எழுத்தாளரான - நான் சில பிரச்சினைகளைக் குறித்துப் பேசுவதற்கு என்னை அனு மதிக்கு மாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினைகள் என்னை மட்டுமே அலைக்கழிப்பவை அல்ல என்றும் நான் கருது கிறேன். தொடக்கத்தில், இந்தக் காங்கிரசைப் பற்றிச் சில வார்த்தைகள். இந்தக் காங்கிரசைத் தமது பிரசன்னத்தாலும், அதன் பணியில் தாம் காட்டும் அக்கறையாலும் கெளரவித்துள்ள நமது நல்ல நண்பர்களை விருந்தினர்கள் மத்தியில் காண்பது, நம் அனைவருக்குமே பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. ஜாரோஸ்லா இவாஸ் கீவிக்ஜ் அன்னா செ.கர்ஸ், ஜார்ஜி ஜகரோவ் ஆகியோரும் மற்றும் சோஷலிச நாடுகளிலிருந்து வந்துள்ள் நமது ஏனைய . சோதர சோதரிகளான எழுத்தாளர்களும், மற்றும் பாப்லோ , நெரூடா, சார்லஸ் ஸ்னோ, பமேலா ஜான்ஸன், ஆர்ட்டர், லுன்ட்க்விஸ்ட், மரியா ஒயின் ஆகியவர்களைப் போன்ற பெரிய நூலாசிரியர்களும், நமது நல்ல அண்டை நாட்டினரும் நண்பர் க ளுமா 687 மார்ட்டி. லார்னி, லின்னா வய்னோ , மரியா தெரிer லியோன் ஆகியோரும், மற்றும் நமது மதிப்புக்குரிய அயல்நாட்டு நண்பர்கள் அனைவரும் நமது அருகிலேயே அமர்ந்திருப்பதை உணர்வது மன நிறைவை அளிக்கிறது) ..