பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"களுமே சற்று உணர்ச்சி வசப்பட்டவர்களாகவே இருக்க முனைகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே. நமது "சிரமமய மான” இளம் எழுத்தாளர்கள், என்னை : அந்தப் பாதிரியாரின் மகனான சிறுவனையே எண்ணரிப் பார்க்கச் செய்கின்றனர்: அவர்கள் தன்னந்தனியாகவே விளையாடு கிறார்கள்; அவர்களுக்குத் தோழமையுணர்ச்சி ஏதும் இருக்க வில்லை; மேலும், வயதில் முதிர்ந்த, உணர்ச்சி வசப்பட்ட சண்டாளர்களாகிய நாம் அவர்களுக்காகப் பரிவு காட்டி, அழுவதும்கூட இல்லை; அவர்களோடு உண்மையிலேயே தொடர்பு கொள்வதற்கும் நாம் முயல்வதில்லை. நாம் செய்வ தெல்லாம், புதிதாகப் படையில் சேர்க்கப்பட்டவர்களை, ஒரு கிழட்டு சார்ஜெண்ட் எப்படி நடத்துவாரோ, அப்படி அவர்களை நடத்தி வருவதுதான். இதற்கு நாம் முடிவு கட்டியாக வேண்டி, இதற்கெல்லாம் ஒரு சால் ஜாப்பைத் தேடிக் காண முயல்வதை நிறுத்தியாக வேண்டிய தருணம் வந்து விட்டது என்றே எனக்குத் தோன்று கிறது. இளம் எழுத்தாளர்களில் ஒரு பகுதியினரோடு நமக்குள்ள இயல்புக்கு மாறான தற்போதைய உறவுகளுக்கு, நாம் அனை பேரும்தான் குற்றவாளிகள் என்பதை நாம் நேர்மையோடு ஒப்புக் கொள்வோம்-காம்சொமால் ஸ்தாபனம் எழுத்தாளர்களது யூனியனின் தலைமையையும், மூத்த எழுத்தாளர்களான நம்மையும்தான் குற்றம் சாட்ட வேண்டும். இந்தக் குற்றத்திலிருந்து நான் என்னை விடுவித்துக் கொள்ள முடியாது என்பதும், அவ்வாறு விடுவித்துக் கொள்ள நான் விரும்பவும் இல்லை என்பதும் சொல்லாமலே விளங்கும். எனவே நாம் விஷயங்களை நேர் நின்று நோக்கினால், நிலைமைகள் இவ்வாறுதான் உள்ளன. இளைஞர் கள் அகந்தையும் சினந்து சீறும் குணமும் படைத்தவர்களாக இருப்பதுதான் வழக்கம். நல்லது. இந்தக் குற்றத்துக்கான பொறுப்பில் ஒரு பகுதியை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால், ஒரு சமரசம் காணும் முயற்சியில் நாம்தான் முதலடியையும் எடுத்து வைத்தாக வேண்டும். இதனால் நமது பெருமை ஒன்றும் குலைந்து போய் விடப் போவதில்லை. இதுதான் நாம் செய்யக் கூடிய மிகமிக விவேகமான,-அல்லது நீங்கள் இவ்வாறு கூற விரும்பினால், மிக மிகத் தொலைநோக்குள்ள காரியமாகும் என்று நான் கருது கிறேன், இந்த இளம் மக்களும் ஒரு ஃபிராண்டேயின் நிலையை மேற் கொள்வது, ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை நியதிகளை அங்கீகரிக்க மறுப்பது போன்ற சில விஷயங்களில் குற்றவாளி இவ்வா றுதல் படைத்தவர் பொறுப்பில் ஒரு