பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகவே கிட்டும் ஒரு ராணுவத்தில் உள்ள முறையைப் போன்றே உள்ளது; அதாவது ஒரு மனிதர் ஜெனரல் பதவியை எட்டிப் பிடிக்கும் காலம் வரும்போது, அவர் மிகவும் சிதிலமடைந்து போனவர் போல் தோற்றும் அளவுக்கு அத்தனை முதுகை தட்டிப் போயிருப்பார். நரை மயிர் மிகவும் மரியாதைக்குரியது என்பது உண்மைதான்; என்றாலும் அது மட்டுமே ஒரு மனிதரைத் தலைமைக்குத் தகுதியான வராக ஆக்கிவிட முடியாது. முடியுமா அது? இந்தக் காங்கிரசுக்குப் பிரதிநிதிகளாக வந்துள்ளவர்களின் சராசரி வயது கிட்டத்தட்ட அறுபது-இது நமக்கு வருத்தம் தருவதாக இல்லையா? எனலே நாம் இன்று இப்படித்தான் இருக்கிறோம்; ஒரு நல்ல திறமைசாலி, வருங்காலத்தைப் பற்றியே சிந்திக்கிறார்; தமது வீட்டைச் சீரழிவுக்கும் சீர்குலைவுக்கும் உள்ளாக்கக் கூடிய நபர்கள் அல்லாத நல்ல திறமைசாலிகளாக நம்மை நாமே கருதிக் கொள்வதற்கு நமக்கு உரிமை உண்டு. . எனவே, நீங்களே காண்டதுபோல், இளைஞர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பது ஏற்கெனவே மிகவும் அதியவசரமா ன விஷய மாகி விட்டது; இதனை இனியும் தள்ளிப்போட முடியாது. இதுபற்றி உரிய காலத்தில் தீர்மானித்தாக வேண்டும். - அண்மைக் காலமாக, சோவியத் எழுத்தாளர்களான நமக்குப் படைப்பாக்கச் 4 * சுதந்திரம்” > வேண்டும் எனக் கூக்குரல் கிளப்பும் பல குரல்கள் மேலை நாடுகளிலிருந்து எழுந்து வருவதை நாம் கேட்டு வருகிறோம். 1921-ல் மியாஸ்னிகோவ் மன்னராட்சி வாதிகளிலிருந்து அராஜக வாதிகள் உட்பட அனை வருக்கும் பத்திரிகைச் சுதந்திரத்தை வழங்கு மாறு யோசனை தெரிவித்தபோது, லெனின் இவ்வாறு அவருக்குப் பதில் எழுதினார்:

    • மிகவும் நல்லது. ஆனாலும் ஒரு நிமிஷம் : நமது புரட்சியின்

தான் காண்டுக்கால அனுபவத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் ஒவ்வொரு மார்க்சியவாதியும் ஒவ்வொரு தொழிலாளி யும் இப்படித்தான் கூறுவார்: * நாம் இதனைக் கூர்ந்து கவனிப் போம்-இது எத்தகைய பத்திரிகைச் சுதந்திரம்? எதற்காக? எந்த வர்க்கத்துக்காக?' ** அப்படியானால், நமது புரட்சியின் ஐம்பதாண்டுக் கால அனுபவத்தால் அதிக ஞானம் பெற்றுள்ள மார்க்சியவாதிகளும் தொழிலாளர்களும், ஒரு பரிபூரணமான பத்திரிகைச் சுதந்திரம் பற்றிக் - கனவு கண்டு கொண்டிருப்போ ரின் வேண்டுகோள்களைக் கேட்கும்போது, அவர்கள் இப்போது என்ன கூறுவார்கள்? '436