பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லும், உங்களது அற்புதமான திருநாளில் நான் ஒரு நல்ல கிழட்டுப் பிறவி போலவே தோற்றமளிப்பேன் என்பதாலும், நான் சற்று வருத்தமும் அடைகிறேன். கஜாக்ஸ்தான் எழுத்தாளர்களின் மூன்றாவது காங்கிரசில், உரையாற்றும் போது ஷோலகோவ். தமது உரையின் மிகவும் செம்பாகமான பகுதியை, இளம் எழுத்தாளர்களைப் பயிற்றுவித்து படைப்பாக்கத் துறையில் பணியாற்ற அவர்களுக்கும் வாய்ப்புண்டு என்பதை உறுதி செய்வது பற்றிய பிரச்சினைகளுக்கே ஒதுக்கினார். இந்தத் துறையில் இன்னும் தமது முதல் அடி களையே எடுத்து வைத்து வந்தவர்களின் பால் காட்டும் ஒரு தந்தையின் அக்கறையே அந்த எழுத்தாளரின் வார்த்தைகளில் குடி கொண்டிருந்தது; என்ற போதிலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் எவ்விதத்திலும் இளக்காரம் காட்டுவதாக இருக்கவில்லை; அவரது - பேச்சைக் கேட்ட பலரையும், எப்போதுமே வானோங்கிப் பறக்கும் உருவ கச் சிறப்பைப் பெற்று விளங்கும் படைப்புக்களை படைக்கும் ஓர் எழுத்தாளருக்கே உரிய அவரது உரையில் மேலோங்கி நின்ற கற்பிதக் காட்சி கவர்ந்து விட்டது: - ' 'பொன்னிறக் கழுகு தனது குஞ்சுகளுக்கு எவ்வாறு பறக்கக் கற்றுக் கொடுக்கிறது என்பதைப் பற்றி என்னிடம் ஒரு முறை கூறினர். அது அவற்றைச் சிறகை விரித்துப் பறக்கச் செய்கிறது; அவற்றைக் கீழே இறங்க அனுமதிக்காமல், அவற்றை மேலும் மேலும் உயரே பறந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கிறது; அவை முற்றிலும் களைப்படையும் வரையிலும் அவற்றை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறது. இவ்வாறுதான். ஓர் இளம் பொன்னிறக் கமுகு வானில் உயரப் பறந்து செல்லக் கற்றுக் கொள்ளும்...... நமது இளம் எழுத்தாளர்களைப் பயிற்றுவிப்பதில், நாம் இந்த முறையைத்தான் பயன்படுத்த வேண்டும்; மேலும் மேலும் உயரே ஏறிச் செல்லுமாறு அவர்களை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்; அப்போதுதான் இதன் பயனாக அவர்கள் பயந்தாங்கொள்ளிக் காக்கைகளாகவோ வீட்டுப் பெட்டைக் கோழிகளாகவோ இல்லாமல், இலக்கியத்தில் உண்மையான கழுகு களாக உருப் பெறுவார்கள். ஆயினும் பொன்னிறக் கழுகானது தனது குஞ்சு கள் முதல் முயற்சியிலேயே தேவைப்பட்ட உயரத்துக்குப் பறக்க இயலாவிட்டாலோ, அல்லது அவ்வாறு பறப்பதற்கு அவை பயந்தாலோ, அவற்றின் சிறகுகளை முறித்துப் போட்டு விடுவ தில்லை. அதேபோல் அரும்பிவரும் எழுத்தாளர்களின் இறக்கைகளை முறித்துப் போடவும் நமது விமர்சகர்களுக்கு உரிமை

கிடையாது.

39