பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிமைகளும் கொண்ட இளம் மாதாக இருந்தாள். அவள் என்னைக் கடந்து சென்றபோது, தன் கணவருக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மிகவும் மிருதுவான குரலில் இவ்வாறு கூறினாள்: “் அவர்கள் மீண்டும் நம்மோடு மோத வருகிறார்கள், அவர்கள் ஏன் நம்மை அமைதியாக வாழவிடக் கூடாது? அவர் களுக்கு என்ன நேரக் காத்திருக்கிறது என்பதைக் கற்றுக் கொடுங்கள். செய்வீர்களா, ஃபெத்யா?' கரடிபோல் ேத ா ற் ற ம ளி த் த ஃபெத்யா எந்திர எண்ணெயினால் கறுத்துப் பிசுக்குப் பிடித்துப் போயிருந்த ஒரு கைக்குட்டையைக் கொண்டு வியர்வை பொங்கும் தமது கைகளைத் துடைத்தவாறே, தம் மனைவியை நோக்கிக் கருணை காட்டும் பாவத்தோடு புன்னகை செய்தார்; கனத்து உறுமும் குரலில் இவ்வாறு கூறினார்: இரவு முழுவதும்தான் நீ எனக்குப் பிரசங்கம் செய்து கொண் டிருந்தாய். இன்னும் நீ அதனை நிறுத்தவில்லை, இப்போது இவ்வளவு போதும், நான் என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியும். நீ ஒன்றும் எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. நீ செய்ய வேண்டியதெல்லாம் இது தான்", கினிலோய் லோகை நாம் கடந்து வரும்போது அவர்கள் வைக்கோலைப் போர் போட்டுக் குவித்து வைத்துக் கொண்டிருந்த லட்சணத்தைப் பார்த்தோமே, அந்த மாதிரியிலேயே உங்கள் கோ ஷ்டித் தலைவரும் போர் போட்டுக் கொண்டே போனால், நாங்கள் அவரை உயிரோடு தோலை உரித்து விடுவோம் என்று நீ வீடு திரும்பியவுடன் அவரிடம் போய்ச் சொல், இந்த விஷயத்தை அவரிடம் சொன்னால் போதும், சொல்வாயா? அந்தப் பெண் இதனை ஆட்சேபித்து ஏதோ கூற முயன்றாள் : ஆனால் அவளது கணவர் கோபாவேசமிக்க ஒரு பார்வையிலேயே அவளை வாயடைக்கச் செய்துவிட்டார்; பின்னர் மேலும் கனத்த உறுமற் குரலில் இவ்வாறு கூறினார்; “தயவு செய்து வாயை மூடு. நீ பேசியது போதும். எங்களை அணிவகுத்து நிற்கச் செய்தவுடனேயே அவர்கள் நீ சொல்ல நினைப்பதைக் காட்டிலும் மிகவும் சிறப்பான முறையில் எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுப்பு.rvர் கள்.” படையில் சேரப் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள், சதுக்கத்தி லுள்ள பேச்சாளர் மேடை முன்னால் ஒழுங்கான வரிசை களாக

அணிவகுத்து நிறுத்தப்பட்டார்கள். பல மிக்க மார்பைக்

48