பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்லை முளைத்துக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொருவரின் மீதும் பாய்ந்து தாவி, எவருக்கும் எந்தவொரு நிம்மதியையும் கொடுக்காத அவன் எத்தகை சீலை' பேனாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு நான் இறுதிவரை யிலும் போராடிய அந்த முதல் ஜெர்மன் போரை நினைத்துப் பார்த்தேன்; எதிரிகளை நான் எவ்வாறு வெட்டி வீழ்த்தினேன் என்பதையும் நினைவு கூர்ந்தேன்... இதோ இந்தக் கையினால் அவர்களில் எட்டுப் பேரை வெட்டி வீழ்த்தினேன். எல்லாம் தாக்குதலின் போதுதான்.” இவ்வாறு கூறும்போது அவர் வெட்கத்தோடு புன்னகை புரிந்தார்; அவரது குரலும் தாழ்ந்தது: இந்தக் காலத்தில் நான் அதைப்பற்றி வாய்விட்டுக் கூற முடியும்; ஆனால் முன்போ : அது என்னவோ அசிங்கமாகத்தான் தோன்றியது...அந்தப் போரில் நான் இரண்டு செயின்ட் ஜார்ஜ் சிலுவை விருது களையும் இரண்டு மெடல்களையும் பெற்றேன். அவற்றை நான் சும்மா காரணமில்லாமல் என் மார்பில் குத்தித் தொங்க விட்டுக் கொண்டிருக்கவில்லை, தெரியுமா? நான் அதைச் சொல்லக் கூடாதுதான், எனவே நான் சென்ற யுத்தத்தைப் பற்றிச் சிந்தித்த வாறே !..டுக்கையில் படுத்துக் கிடந்தேன்; அந்த ஜெர்மன் போரில் ஹிட்லரும் பங்கெடுத்தான் என்று ஒரு பத்திரிகையில் படித்த செய்தி என் நினைவுக்கு வந்தது. இதனை நினைவு கூர்ந்ததும் மிகவும் கடுமையான ஒரு வருத்த உணர்வு என் இதயத்தைக் கவ்விப் பிடித்தது, நான் படுக்கை யில் எழுந்து உட்கார்ந்தேன்; வாய்விட்டுப் பேசினேன்; * தாச மாய்ப் போக! அந்தச் சமயத்தில் என் வழியில் குறுக்கிட்ட அந்த எட்டுப் பேரில் அவனும் ஒருவனாக ஏன் இல்லாது போனான்? அவ்வாறு இருந்திருந்தால் நான் என் வாளை ஒரே சுழற்று சுழற்றியிருப்பேனே, அவனும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு வீழ்ந்திருப்பானே!* என் மனைவி விழித்துக் கொண்டு விட்டாள். 'எதைக் குறித்து அலட்டிக் கொண்டிருக் கிறீர்கள்?' என்று என்னிடம் கேட்டாள். ' எல்லாம் உறிட்லரைப் பற்றித்தான். அவன் படுதாசமாய்ப் போக! தூங்கு. நஸ்தாஸ்யா, தூங்கு. இதெல்லாம் உன் புத்திக்கு எட்டாது என்று கறினேன் நான். * : அவர் தமது சிகரெட்டைக் கசக்கி அணைத்தார்: சேணத் தின்மீது தாவி ஏறினா

  • 'நல்லது. கவலை வேண்டாம், அவனுக்கு நேரவிருக்கும்

கதியை அவன் அடைந்தே தீருவான், ஒழியட்டும் அவன்,

இவ்வாறு கூறிவிட்டு அவர் கடிவாளத்தைச் சுருட்டிக்

52