பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின்போது, அவர் தமது எந்திரத்தை விட்டுக் கீழே இறங்கி , பங்கருக்குள் உற்றுப் பார்த்தார்; பின்னர் அவர் புகை பிடிப்பு பதற்காக, சிலிர்த்து நின்ற அரிதாள் க ளுக்கு மேலாகச் சற்றுத் தூரம் நடந்து சென்றார். " நீங்கள் போர்முனைக்குப் போக வேண்டியிருந்தால், உங்கள் இடத்தில் வேலை பார்க்க யாரை யா வ து ஏற்பாடு செய்திருக் கிறீர்களா?

  • ' நிச்சயமாக
    • யாரது?
  • என் மனைவி.

அவள் உங்கள் வேலையைச் செய்ய முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தானா? ஜெலென் கோள் வெயிலால் கறுத்தும், தன் மீது படிந்திருந்த தூசிப்படலத்தால் மேலும் கறுத்தும் போயிருந்த தமது முக பெல்லாம் வி ரியப் புன்னகை புரிந்தார். சக்கரத்தைச் சுற்றிக் கொண் டிருந்த அந்த இளம் மாது வே லிக் கம்பியின் மீது சாய்ந்த பாறு இவ்வாறு கூறினாள்: 1* நான்தான் ஜெலென்கோவின் மனைவி, இந்த வேலையை நான் தாற்காலிகமாகத்தான் செய்து வருகிறேன். (சென்று ஆண்டில் நான் கம்பைன் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்தேன்; என் கணவரைவிட அதிகமாகவும் சம்பாதித்தேன். இதனை நினைவூட்டியது ஜெலென்கோவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது; அவர் ஓரளவு எரிச்சலோடு இவ்வாறு கதறினார்: "நிலைமை மிகவும் மோசமாகிப் போய் விட்ட..Trல், எனக்குப் பதிலாக இவள் வேலை செய்ய முடியும் என்பது உண்மைதான். என்றாலும் எங்களுக்கு வேறு திட்டங்கள் உள்ளன. நாங்கள் இருவருமே போர் முனைக்குச் செல்ல விரும்புகிறோம்... தன து புருஷனையே பேசிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடும் பெண்களின் ரகத்தைச் சேர்ந்தவள் அல்ல மரினா ஜெலென் கோவா. எனவே அவள் தன் கணவர் தொடங்கிய பேச்சைத் தானே முடித்து வைத்து விட்டாள்: எங்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எனவே நாங்கள் இரு வரும் சுலபமாகச் சேர்ந்தே போக முடியும். மேலும், என் கணவரைவிட மோசமாக இல்லாமல், என்னாலும் ஒரு டாங்கியை ஓட்ட முடியும், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதே

இல்லை !

58