பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்த்தைகளை நான் நினைத்துப் பார்த்தேன், அது இருண்ட வானத்திலிருந்து நட்சத்திரங்கள் உ தி ர் ந் து விழுந்து கொண்டிருக்கும் ஜூலை மாதத்தின் ஓர் அமைதியான இரவு > அவர் ஒரு முதியவரின் மிருதுவான குரலில் இவ்வாறு கூறினார்: “என் பா ட் ட னார் நெப்போலியனுக்கு எதிராகப் போராடினார். நான் சின்னஞ்சிறு வனாக இருந்தபோது அவர் அதைப்பற்றியெல்லாம் என்னிடம் கூறினார். நெப்போலியன் நமக்கு எதிராகப் போரைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு தல்ல நாளில் தனது தளபதிகளையெல்லாம் திறந்தவெளியில் ஒன்றுகூடச் செய்தான். 'ரஷ்யாவை ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கம் . எனக்கு இருக்கிறது. மிஸ்டர் தளபதிகளே, இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டான். 'மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களே! அவ்வாறு நடக்காது. அது மிகவும் வலிமைமிக்கதொரு நாடு. அதனை. நாம் என்றுமே ஜெயிக்க முடியாது' என்று அந்தத் தளபதிகள் எல்லோரும் கூறினர். பின்னர் நெப்போலியன் வானத்தைச் சுட்டிக் காட்டி, 'அங்கு நட்சத்திரம் தெரிகிறதா, பாருங்கள்' என்று அவர்களிடம் கேட்டான். 'இல்லை, 7:ங்களுக்குத் தெரியவில்லை. நட்சத்திரத்தைப் பகல் நேரத்தில் நாம் பார்க்க முடியாது' என்று அவர்கள் கூறினர். 'ஆனால், என் ரூல் பார்க்க முடிகிறது. அந்த நட்சத்திரம் ஒரு நல்ல சகுனம்' என்று நெப்போலியன் அவர்களிடம் கூறினான், இவ்வாறு கூறிவிட்டு அவன் தன் படைகளோடு நமக்கு எதிர!* கப் படை மூண்டு யெந்தான். அவன் வரும்போது விசால் மான வாசல் வழியாகத்தான் வந்தான்; ஆனால் போகும் போதோ, எப்படியோ தப்பிப் பிழைத்துப் போகுமளவுக்கு ஒரு குறுகிய சிறிய வாசல் வழியாகத்தான் போனான். நமது மக்கள் அவனைப் பாரீஸ் வரையிலும் விரட்டியடித்துவிட்டுத்தான் திரும்பினர். அதே - அசட்டுத்தனமான நட்சத்திரம்தான் இந்த ஜெர்மன் தளபதிக்கும் தோன்றியிருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. இவனும் வாசலைவிட்டு வெளியேறி ஓடவேண்டிய காலம் வரும்போது, இவனுக்கும் வாசல் மிக மிகக் குறுகியதாக ஆக்கப்பட்டுவிடும். இவன் அந்த வாசலின் வழியாகத் தப்பிச் செல்வானா, மாட்டானா என்பது எனக்குத் தெரியாது. அவன் தட்! டபிச் செல்லவே கூடாது - என்று நாம் கடவுளை வேண்டிக்கொள்வோம். அப்போதுதான் மற்றவர் களும், இப்போதும் சரி, எப்போதும் சரி, மீண்டும் இந்த

மாதிரி முயற்சியில் என்றுமே இறங்க மாட்டார் கள்.

64