பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனர்; அங்கு புதிதாகச் சீவி எடுக்கப்பட்ட' பைன் மரக் கட்டைச் சீவல்கள், மற்றும் ஆற்றின் சேறு ஆகியவற்றின் 'மணம் நிலவியது. ஸாப்பர்கள் தமது இடுப்புவரையிலும் உடைகளைக் களைந்து விட்டிருந்தவர்; சூரிய ஒளியால் பதப்பட்டிருந்த அவர்கள் திறந்த முதுகுகள் சூரிய வெளிச்சத்தில் வியர்வையோடு பளபளத்தன; அவர்கள் அங்கு இழைத்துப் போட்டு வந்த புதிய மரப் பலகைகளைப் போல் அவை மிருதுவாகவும் தோற்றம் மளித்தன. வரிசையாகப் போடப்பட்டிருந்த மரக் கட்டைகளின்மீது. - நாங்கள் மிகவும் கவனமாகக் காரை ஓட்டிச் சென்று நதியைக் கடந்தோம். கரைகளின்மீது டாங்கிகளும், டிராக்டர்களும் தமது தடங்களைப் பதித்து, சேற்று மண்ணைக் கிளறி விட்டிருந் தன. ஒரு காலத்தில் கிராமமாகவிருந்த அந்தப் பகுதிக்குள். நாங்கள் பிரவேசித்தோம். வீடுகளின் கருகிப்போன இடிபாடுகள், செங்கல் அடுக்குகளுக்கு மேலாக எழுந்து நின்ற கறுத்துப்போன புகைக் கூண்டுகள், கருகிப்போன வீட்டுப் பண்ட பாத்திரங்கள், உடைந்து போன பானைகளின் துண்டுகள், உலோகக் கம்பிகளால் பின்னி உருவாக்கப்பட்ட ஒரு குழந்தைத் தொட்டில் ஆகிய வற்றை நாங்கள் கண்டோம், அதிசயமாகத் தான் மட்டும் தப்பிப் பிழைத்து, ஒன்றே ஒன் றாக நின்ற ஒரு சூரிய காந்திச் செடி, பொன்னிற மஞ்சள் இதழ்கள் சூழப்பட்ட தனது வட்ட வடிவமான முகத்தைச் சூரியனை நோக்கித் திருப்பி நின்ற காட்சியானது, அந்த இருளார்ந்த பின்னணியில் இயல்புக்கு மாறான, தெய்வத் துரோகமான அழகுக்' 'கொலுவாகத் தோற்றியது. எரிந்து சாம்பலாகிவிட்ட ஒரு வீட்டின் அஸ்திவாரத்திலிருந்து சற்று தூரத்தில் அழித்து நாசமாக்கப்பட்டிருந்த ஓர் உருளைக்கிழங்குப் பாத்தியின் மத்தியில் அந்தச் சூரியகாந்தி காட்சியளித்தது. அதன் இலைகள் லேசாகக் கருகியிருந்தன; இடிபாடுகள் அதன் தண்டின் மீது குவிந்து கிடந்தன; என்றாலும் அது உயிரோடு இருந்தது! இந்தப் பொதுவான நாசம், மரணம் ஆகியவற்றுக்கு மத்தியில் எல்லாமே நாசமாகியிருந்த போதிலும் அது மட்டும் உயிர் வாழ்ந்தது. காற்றில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்த அந்தச் சூரியகாந்திச் செடி மட்டுமே, அந்த இடுகாட்டில் தென் பட்ட ஒரே உயிருள்ள பிறவியாகத் தோன்றியது . '. - ஆயினும் உண்மை அதுவல்ல. நாங்கள் தெரு வழியே நடந்து சென்ற போது, கரி படிந்து கறுத்துப்போன ஒரு சுவரின் மேல் மஞ்சள் நிறமான பூனையொன்று அமர்ந்திருப்பதையும்

கண்டோம். அந்தப் பூனை அமைதியாகத் தன்னை நக்கிச் சுத்தப்

69