பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த விவசாயப் பெண்களில் ஒருவரை நோக்கி, இனி அவர்கள் எப்படி வாழப் போகிறார்கள் என்று கேட்டேன், அதற்கு அவள் இவ்வாறு பதில் சொன்னாள்: - 4 'நாசமாய்ப்போன அந்த ஜெர்மன்காரர்களை உங்களால் எவ்வளவு தூரம் விரட்டியடிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் விரட்டியடியுங்கள். எங்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் எங்க ளுக்குப் புது வீடுகள் கட்டிக் கொள்வோம், கிராம் சோவியத் எங்களுக்கு உதவும், நாங்கள் சமாளித்துக் கொள்வோம்." அந்தப் பெண்டு பிள்ளைகளின் சிவந்த ஓரங்களைக் கொண்ட கண்க ளும், சாம்பலைத் தோண்டிக் கிளறியதால் சாம்பற் படலம் படிந்த அவர்களது முகங்களும் அத்தனை சீக்கிரமாக மறந்துவிடக் கூடியவை அல்ல. நான் இவ்வாறு சிந்தித்தேன்; "' அமைதியான தகரங்களையும், கிராமங்களையும் பூமிப் பரப்பிலிருந்தே துடைத் தெறியவும், அர்த்தமற்று, எந்த நோக்கமுமே இல்லாமல், எல்லா வற்றுக்கும் நெருப்பு வைத்து அழித்தொழிக்கவும் வேண்டும் மென்றால், அந்த நாஜிகள் உயிர் ராசிகள் அனைத்தையும் எத்தனை மிருகத்தனமாகவும், பேய்த்தனமாகவும் வெறுக்க வேண்டும்! நாங்கள் மற்றொரு கிராமத்தின் வழியாகவும் காரை ஓட்டிச் சென்றோம். மீண்டும் எங்களைச் சுற்றிலும் காடுகளே தென் பட்டன; ; பின்னர் நாங்கள் அறுவடை முடியாத கோதுமை வயல்க ளை யும், தமது நீல நிறப் பூக்களை இன்னும் தரித்துக் கொண்டிருந்த சில செடிகளைக் கொண்ட சணல் விளையும் சிறு நிலம் ஒன்றையும், மற்றும் அந்தச் சணல் நிலத்திலிருந்து தலை நீட்டிக் கொண்டிருந்த ஒரு கம்பில் ஆணியால் அறையப் பட்டிருந்த " கண்ணிவெடிகள் ஜாக்கிரதை! என்ற எச்சரிக்கைப் பலகையும், ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு காவல் வீரனையும் கண்டோம். ஜெர்மானியர்கள் பின் வாங்கிச் செல்லும்போது அவர்கள் ரோடுகளிலும், ரோடுகளை ஒட்டிய நிலத்திலும், தாம் கைவிட்டுச் சென்ற கார்களிலும், தமது பதுங்கு குழிகளிலும்,-ஏன் இறந்து போன தமது போர்வீரர்களின் சடலங்களிலும் கூட,-கண் ஏணி வெடிகளை மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். திரும்பவும் பிடிக்கப்பட்ட பிரதேசங்களில் இந்தக் கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து அவற்றை அகற்றுவதில் நமது லாப்பர்கள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்; எங்கு பார்த்தாலும் அவற்றைக் குனிந்து தேடிக்கொண்டிருக்கும் அவர்களது உருவங்களை நாங்கள் காண முடிந்தது. இதற்கிடையில்

கார்களும் வண்டிகளும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு

72