பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் சந்திப்புக்கள் - இரவைக் கழிக்க எனக்கும், எனது மூன்று நண்பர் களுக்கும் இளம் ஆஸ்பென் மரங்களைக் கொண்டு கவ ன மாக மூடி மறைக்க பட்டிருந்த கூடாரம் ஒன்றை வழங்கினர். தரையில் பிர் மரக் கிளைகளைப் பரப்பி, அதன் மீது விரிக்கப்பட்டிருந்த ஒரு கோட்டுதான் எங்கள் படுக்கையாக விளங்கியது. நாங்கள் கத கதப்புக்காக ஒருவருக்கொருவர் நெருக்கமாக சுருண்டு படுத்துக் கொண்டோம்; எங்களது கம்பளிக் கோட்டுகளை எங்கள்மீது வாரிக்கு வித்துப் போட்டுக் கொண்டு தாங்கிவிட்டோம். இரவு 11 மணிக்கு எனக்கு அடியில் பூமி குலுங்கியது. எனது தூக்கத்திலும் நான் ஒரு குண்டு வெடிப்பின் கனத்த முழக் கத்தைக் கேட்டேன். நான் என் கம்பளிக் கோட்டை எடுத்து எறிந்து விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இதனைத் தொடர்ந்து நிலவிய அமைதியில், பைன் மரங்கள் காற்றில் சலசலப்பதையும், மழைத்துளிகள் கூடாரத்தின் பக்கங்களில் மோதி விழும் சத்தத்தையும் நான் கேட்டேன். அந்த அமைதி நெடுநேரம் நீடிக்கவில்லை. மேற்கே வெகு தொலைவில் எங்கிருந்தோ ஒரு குண்டுவெடிப்பின் உள்ளடங்கிய சத்தம் கேட்டது; பின்னர் மழை பெய்யும் சத்தத்தின் ஊடாக, எங்களுக்கு மேலாக! பறந்து செல்லும் ஒரு குண்டின் மெல்லிய அழுகுரலைக் கேட்டேன்; இதன் பின் உடனே அது இடிபோன்று வெடித்து முழங்கிய சத்தம் கேட்டது, எனக்கு அடுத்தாற்போல் படுத்துக் கிடந்த குதூகலமிக்க இளம் லெப்டினென்ட் தூக்கக் கலக்கத்தோடு கூறிய குரல் கேட்டது, “ஜெர்மானியர்கள் கனரகப் பீரங்கிகளால் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் அவர் தமது கைக்கடிகாரத்தின் சுடர்விடும் முகத்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்து பேசினார்;

    • நாம் இங்குக் காரை ஓட்டி வந்தோமே, அந்த ரோட்டு

வழியில்தான் அவர்கள் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கி மூர்கள், இது ஒரு தொல்லை தரும் பீரங்கிப் பிரயோகம். ஒவ்வோர் இரவிலும் அவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள், நான் உங்களுக்குக் கூறக் கூடிய யோசனை, நீங்கள் இதை யெல்லாம் கவனிக்காமல் தூங்குங்கள் என்பதுதான். இதற் கெல்லாம் நீங்கள் பழகிப் போய்விட வேண்டும். இந்த ஜெர்மானி யர்கள் ஒரு நேரம்தவறாத பிறவிகள்; அவர்கள் சரியாகப் பதினைந்து நிமிட நேரம் சுடுவார்கள்; பிறகு நிறுத்தி விடுவார்கள்; ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து அவர்கள் மீண்டும் நமக்கு வேடிக்கை காட்டி மகிழ்விக்கத் தொடங்கு

வார்கள்.

74