பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல நிலவறைகளை நாங்கள் கண்டோம், அந்தக் காட்டில் பல் கார்களும் நின்றன; எனினும், அவற்றின் அருகில் சென்று அவை மீது மோதிக் கொண்டலொழிய அவற்றைக் கண்டு கொள்ள் முடியாத விதத்தில், அவை மிகவும் சாமர்த்தியமாக மூடி மறைக்கப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் 'ஸாப்பர்கள் பலகைகளை அறுத்துக் கொண்டும், சுத்தியலால் அடித்துக் கொண்டும், புதிய பதுங்குமிடங்களைத் தோண்டிக் கொண்டும் வேலை செய்து கொண்டிருந்தனர், அந்த கானகத்தில் பைன் மர ஊசி இலைகளின் மணமும், ஈரக் களிமண்ணின் மணமும் நிரம்பியிருந்தது, ஒரு தடித்த குள்ளமான காப்டன், அதிகாரிகளது நிலவறை &பின் வாசலில் எங்களைச் சந்தித்தார், ஜெனரல் கோஸ்லோவும் " தலைமை அதிகாரியும் அந்தத் தருணத்தில் ஏதோ மும்முரமான , வேலையில் ஈடுபட்டிருப்பதாக அவர் என்னிடம் கூறினார்; பின்னர் அவர் எங்களை அடுத்திருந்த தளபதியின் நிலவறைக்கு மரியாதை போடு அழைத்துச் சென்றார். ந!ாங்கள் சில அகன்ற படிகளின் வழியே இறங்கி, ஒரு குறுகிய சந்தினுள் நுழைந்தோம்; அங்கு எங்கள் முன் ஒரு வாசல் திறந்தது. பதுங்கு குழி என்ற சொல்லுக்கு வழக்கமாக வுள்ள அர்த்த பாவத்துக்கேற்ப அந்தப் பதுங்கு குழி இருக்க வில்லை, அது ஒரு விசாலமான விவசாயக் குடியிருப்பின் குடிசையை ஏதோ மாயமந்திரத்தால் பூமிக்குள் ஆழமாகப் புதைத்து இறக்கி வைத்தது போலத்தான் இருந்தது. இந்தக் கற்பனைத் தோற்றத்தைப் பூர்த்தி செய்ய அங்கு ஒரு பெரிய ரஷ்ய அடுப்பும் இருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். என்றாலும் அங்கு அவர்கள் வைத்திருந்த இரும்பு அடுப்பு எல்லாவிதத்திலும் அவ்வாறே விளங்கியது. அந்தப் பெரிய அறை புதிதாக . இழைத்துச் சுத்தப்படுத்தப்பட்ட மரக்கட்டைகளாலான தரையைக் கொண்டிருந்தது; சுவர்கள் புதிய பலகைகளால் உரு வாக்கப்பட்டிருந்தன; முகடு - பளபளவென்று சுத்தமாக இருந்தது. மேஜைக்கு மேல் ஒரு மின்விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அங்கு 68 பன்மர் ஊசி இலைகளின் மணம் வீசியது. புதிதாகச் சுடப்பட்ட ரொட்டியின் மணமும் வீசுவதாக ஓர் . எண்ணம் தோன்றியது. நாங்கள் அந்தப் பாதாளக் குடியிருப்பை : வியப்போடு பார்த்தோம்; அந்தக் காப்டன் புன்னகை புரிந்த வாறே இவ்வாறு கூறினார்: : : “எங்கள் ஜெனரல் மிகவும் காரியார்த்தமிக்க மனிதர்.. இங்கிருந்து சற்றுத் தொலைவில் கைவிடப்பட்ட கிராமம் ஒன்று : உள்ளது. ஜெர்மானியர்கள் ஒவ்வொரு நாளும் . அதன்மீது :

'17 ,

77