பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்வது வழக்கம், இப்போதோ அவர்கள் ஆறு அல்லது ஏழு அடுக்குகளைப் போட்டுக் கொள்கிறார்கள், மேலும், அவர்கள் தரைக்குள் மேன்மேலும் ஆழமாகக் குழி தோண்டிப் பதுங்கிக் கொள்கிறார்கள். ஆயினும் இதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை, நாங்கள் அங்கேயும் எங்கள் குண்டுகளை வீசி அவர்களை வெளிக்கொணர்ந்து விடுகிறோம். அன்று காலையில் மந்தமான பீரங்கிப் பிரயோ கப் பரிவர்த்தனையோடு தொடங்கிய அந்தப் போர் மேன்மேலும் வலுக்கத் தொடங்கியது. ஜெர்மன் குண்டுகள் வெடிப்பது அதி கரித்து வருவதைக் கேட்ட அந்தக் கர்னல் தொலைபேசிக்குச் சென்றார். அவர் தணித்த குரலில் சுருக்கமாகத் தொலைபேசியில் பேசினார். இதன் பின் உடனடியாகவே இதுவரையிலும் மெளன மாக அடங்கியிருந்த அருகிலுள்ள பீரங்கிப்படை செயல்படத் தொடங்கியது , ஜெர்மன் சிறு பீரங்கிகளின் பிரயோகம் கணிச மான அளவில் குறைந்து விட்டது . ஜெர்மன் பீரங்கிப் படையைப் பற்றி அந்தக் கர்னல் பெரி தாக எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அவர் எங்களிடம் இவ்வாறு கூறினார்: “அவர்கள் சரியாகக் கு றிவைத்துச் சுடத் தெரியாதவர்கள்; அவர்க ளுக்கு எந்த ஒழுங்கு முறையும் கிடையாது. போர்க் களத்துக்கு மேல் பறந்து சென்று இலக்குகளைச் சுட்டிக் காட்டும் விமானம் இல்லாவிட்டால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதோ இடதுபுறம் விழுந்து வெடிக்கும் குண்டுச் சத்தங்களைக் கேளுங்கள். எங்களது பீரங்கிப்படை நேற்றிரவு இருந்த பகுதியின் மீதுதான் அவர்கள் சுட்டுக் கொண்டிருக் கிறார்கள். நாங்கள் பொழுது விடிவதற்கு முன்பே அங்கிருந்து இடம் பெயர்ந்துவந்து விட்டோம். எனவே அவர்கள் ஒன்று மில்லாத இடத்தின் மீது தான் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்; இப்படியே அவர்கள் நெடுநேரம் சுட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு ஒருவேளை அவர்கள் தாங்கள் சோவியத் ஹொவிட்ஸெர் பீரங்கிப் படையை அழித்தொழித்து விட்டதாகத் தமது அதிகாரி களிடம் கூறிக்கொள்ளலாம்,' ' ' ', ஜெனரல் கோஸ்லோவும் சீக்கிரமே வந்துவிட்டார். ஐந்து யுத்தங்களில் போரிட்டிருந்த அந்த ஜெனரல் நரையோடிய

ெந ற் றி ப் பொருத்துக்களும், அவசர கோலமில்லாத

நடமாட்டமும் கொண்ட மத்திம வயது மனிதராக இருந்தார். அவர் ஒரு பெஞ்சின்மீது சோர்ந்து போய் உட்கார்ந்தார்; தமது பெரிய, ரோமம் நிறைந்த கைகளைத் தம்முன் மேஜை மீது

விரிக்கப்பட்டிருந்த வரைபடத்தின் மீது வைத்தார்,

79