பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டளையைக் கேட்டதும், ப ற ந் ேத ா டி ச் செ ன் று, கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு ஜாம் பாத்திரத்தோடு வந்து சேர்ந்தார். இந்த ஜாமை நாங்களேதான் தயார் செய்தோம் என்று பெருமிதத்துடன் கூறிக்கொண்டார் அவர்: இங்கு காட்டில் கிரான்பெர்ரிப் பழங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன; எங்கள் ஓய்வு நேரத்தில் நாங்கள் அவற்றைப் பொறுக்கினோம். இப்போது எங்களிடம் புத்தம் புதிய ஜாம் ஏராளமான அளவில் இருக்கிறது. தமது ஜெனரலைப் போலவே அந்தச் சமையற்காரரும் காரியார்த்த மிக்க நபர்தான்; அவரது ஜாமும் உண்மை யிலேயே அருமையாக இருந்தது. உரையாடலின்போது நேத்ஜெல்ஸ்கியின் ஏனைய குணநலன்களைப் பற்றியும் நாங்கள் தெ ரிந்து கொண்டோம், அன்றொரு நாள் ஜெனரலும், அதிகாரிகள் சிலரும் முன்னணி நிலைகளில் இருந்தனர்; அதிகாரி களின் தலைமையகத்திலேயே தங்கிவிட்ட நெத்ஜெல்ஸ்கி, உணவு நேரம் நெருங்கியவுடன் அவர்களுக்கு நல்ல சூடான உணவைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்தார், எனவே அவர் இரண்டு சக்கர வண்டியொன்றில் ஒரு குதிரையைப் பூட்டிப் புறப்பட்டுச் சென்றார். போகும் போது நடுரோட்டில் ஒரு ஜெர்மன் குண்டு விழுந்து வெடித்து அந்தக் குதிரையைக் கொன்று விட்டது. எனினும், துணிவு மிக்க அந்த இளைஞரை இந்தத் துர்ப்பாக்கியம் நிலைகுலைத்துவிடவில்லை. ஒரு வாளியிலும் தெர்மாஸ் பிளாஸ்கிலும் சூடு பொருந்திய சூப்பை நிரப்பி எடுத்துக்கொண்டு, அவர் எதிரியின் மூர்க்கமான பீரங்கிப் பிரயோகத்துக்கு மத்தியில் ஊர்ந்து ஊர்ந்து சென்று, பசியோடு இருந்த தமது ஜெனரலுக்கும், அதிகாரிகளுக்கும் உணவைப் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டார். சண்டை. மும்முரமடைந்தபோது, நெத்ஜெல்ஸ்கியும் அதில் சேர்ந்து கொண்டார்; சமையலைப் பார்த்துக் கொள்ளு மாறும், இறைச்சித் துண்டுகள் கருகிப்போய்விடாது கவனித்துக் கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளின் எழுத்தரிடம் கூறிவிட்டு, தமது துப்பாக்கியையும், கையால் எறியும் சில வெடிகுண்டு களையும் எடுத்துக்கொண்டு பதுங்கு குழிகளை நோக்கி ஓடினார். இத்தகைய அவசர காலங்களில், ஜெனரல் உண்ணும் உணவு வழக்கம்போல் அத்தனை நன்றாக அமைந்து விடுவதில்லைதான். என்றாலும் அவரது சமையற்காரரின் தேசபக்த உத்வேகம் மதிக்கத்தக்கதாகவே இருந்தது; அது மதிக்க வும்பட்டது. ஒரு

முறை நெத்ஜெல்ஸ்கி தமது உயிருக்கு நேரக்கூடிய ஆபத்தையும்

81