பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீரங்கியைத் திசை திருப்பிக்கொண்டிருந்த போது, அவரும் அவரோடு இருந்த வர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். நவ்மோவின் கபில நிறக் கண்கள் இருண்டன; அவரது உதடுகள் லேசாகப் பிதுங்கித் திருகின. அவரது முகம் இரண்டாம் முறையும் இவ்வாறு மாறுவதைக் கண்டேன். அதாவது அவருக்கு அவரது வீட்டிலிருந்து அடிக்கடி கடிதங்கள் வருகின்றனவா என்று நான் எதையும் யோசித்துப் பாராமல் அவரிடம் கேட்டு விட்ட போதும், அவரது கண்கள் இருண்டன; உதடுகளும் பிதுங்கித் திருகின.

"கடந்த மூன்று வாரங்களில் நான் என் மனைவிக்கு ஆறு

கடி தங்கள் எழுதி விட்டேன்; எனினும் எந்தப் பதிலும் வரவில்லை" என்று சொன்னார் அவர்; பின்னர் அவர் வெட்கத் தோடு புன்னகை புரிந்தவாறே என்னிடம் இவ்வாறு கேட்டார்:

  • நீங்கள் மாஸ்கோவுக்குத் திரும்பிச் செல்லும் போது, தயவு

செய்து என் மனைவியைச் சந்தித்து, நான் இங்கு நன்றா பிருப்பதாகக் கூறி, எனது புதிய விலாசத்தையும் அவளிடம் கொடுப்பீர்களா? பாருங்கள். எங்கள் யூனிட் தனது தபால் எண்ணை மாற்றிக் கொண்டுள்ளது. ஒருவேளை அதனால்தான் அவளது கடிதங்கள் எனக்கு வந்து சேரவில்லையோ, என்னவோ ? இந்த வேண்டுகோளை நிறைவேற்றி வைக்க நான் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தேன், விரைவிலேயே எங்கள் உரையாடல் நின்று போய் விட்டது, ஏனெனில் நமது தயாரிப்புக்கான குண்டுவீச்சு தொடங்கி விட்டது. குண்டுவீச்சி னால் நிலம் அதிர்ந்தது; தனித் தனியான குண்டு வெடிப்புக்களும் சரமாரியான குண்டு வெடிப்புக்களும் காதைச் செவிடுபடச் செய்யும் தொடர்ச்சியான இடி முழக்கமாக ஒன்று கலந்தன, திருப்பித் தாக்கும் தமது குண்டுப் பிரயோகத்தை ஜெர்மானியர்கள் தீவிரமாக்கினர்; அவர்களது கனரகக் குண்டுகள் விழுந்து வெடிப்பது மேலும் மேலும் அருகிலேயே கேட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் நிலவறைக்குள் இறங்கிச் சென்றோம்; எனினும் சில நிமிட நேரத்திலேயே மீண்டும் வெளியே வந்தோம். அப்போதும் அந்த நிலவறைக்கு மேல் தாம் புரிந்து வந்த நிர்மாணப் பணியை! அந்த ஸாப்பர்கள் நிறுத்தி வைக்கவில்லை என்பதைக் கண்டு நான் வியப் படைந்தேன். அவர்களில் கடுவன் பூனையின் மீசையைப்போல் நீண்டு துருத்திக் கொண்டிருந்த பழுப்பு நிற மீசையைக் கொண்ட.. மத்திம வயதினரான மனிதர் ஒருவர், அப்போது

தான் வெட்டி வீழ்த்தப் பட்டிருந்த ஒரு பெரிய பைன் மரத்தின்

85