பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்பாகத்தைத் தமது கோடரியால் தட்டிப் பார்த்த வாறு, அதனை மிகவும் கரிசனையோடு ஆராய்ந்து கொண்டிருந்தார். ஏனையோர் தமது மண்வெட்டிகளையும் கட்டப்படாரை களையும் கொண்டு வேலை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்; அவர்கள் தோண்டியெடுத்த மண்ணை, அங்கிருந்த பிரகாசமான மஞ்சள் நிறக் களிமண் குவியலின் மீது வீசிப் போட்டுக் கொண்டிருந்தனர்; அதனால் அந்தக் குவியல் எங்கள் கண் முன் னால் ஒரு மலையாகவே உயர்ந்து வந்தது. அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவர், சற்றுத் தொலைவில் புல்லின் மீது படுத்துக் கொண்டிருந்த ஒரு போர்வீரனைத் தலையை அசைத்து இனம் காட்டியவாறே, என்னிடம் இவ்வாறு கூறினார்; “எங்களது வேவு பார்க்கும் தலைசிறந்த வீரர்களில் ஒருவரைச் சந்தித்து நீங்கள் பேச விரும்புகிறீர்களா? அதோ அவர் எதிரியின் அணிகளுக்குப் பின்னாலேயே சென்று வந்தவர்; இன்று காலையில்தான் அவர் திரும்பி வந்தார், மிக முக்கியமான தகவல்கள் சிலவற்றையும் அவர் கொண்டு வந்திருக்கிறார். பேச வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சிதான் என்று நான் கூறினேன்; அதன்பேரில் அந்த அதிகாரி பீரங்கி முழக்கத்தையும் மிஞ்சிக் கொண்டு கேட்கும் விதத்தில் அவரை நோக்கி இவ்வாறு கத்தினார்: தோழர் பெலோவ்! அந்த மனிதர் சட்டென்று நாசூக்காகத் துள்ளியெழுந்து நின்றார்; பின்னர் . தமது சட்டையை நேராக இழுத்து விட்டவாறே எங்களை நோக்கி நடந்து வந்தார், திடீரென்று மெளனம் குடிகொண்டது. அந்த அதிகாரி தமது கைக்கடிகாரத்தைப் பார்த்தார்; பெருமூச்சுவிட்டார்; பிறகு இவ்வாறு கூறினார்: நமது போர்வீரர்கள் இப்போது தாக்குதலைத் தொடுத்து விட்டார்கள். பெலோவ் நாசூக்காக நடந்து வந்த நடையில் பூனையின் நடை போன்ற தன்மை ஏதோ புலப்பட்டது. அங்கு தரையில் பைன் மரக்கிளைகளும், காய்ந்த சுள்ளிகளும் மலிந்து தான் கிடந்தன, என்றாலும் அவரது காலடியின் கீழ் ஒரு சுள்ளி கூட முறிந்துச டசடக்கவில்லை. அவர் ஏதோ மண லின்மீது நடந்து வருவதுபோல் தோன்றியது; ஏனெனில் அவரது காலடியின் மூலம் எழுந்த சத்தமே அவ்வளவுதான். இதன் பிறகு வெகுநேரம் கழித்துத்தான் அவர் ஊடுருவிச் செல்ல முடியாத காடுகள் மலிந்த முரோம் பிரதேசத்துக்கு அருகிலுள்ள கிராமங்கள் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டேன்; இதன்பின் தான், வேட்டையாடச் செல்லும் பிராணிகளைப்

பயமுறுத்தி விரட்டிவிடாதபடி, மிருதுவாக, சத்தமே இல்லாமல்

86