பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்து செல்லும் ஒரு வேட்டைக்காரரின் திறமையை அவர் எப்படிக் கற்றுக் கொண்டிருந்தார் என்பதையும் புரிந்து கொண்டேன். துணை லெப்டினென்ட் நவ்மோவுடன் நான் நடத்திய உரையாடலின்போது என்ன நடந்ததோ, அதுவேதான் இப் - போதும் நடந்தது. இந்த மனிதரும் தம்மைப் பற்றிப் பேசுவதற்கு விரும்பவில்லை; எனினும் தமது தோழர்களை இவர் ஆர்வத்தோடு பாராட்டிப் பேசினார். தமது தாயகத்துக்காக அஞ்சாது போரிடும் வீரர்கள் யாவருக்கும், அடக்கம் ஓர் அத்தியாவசியமான குணமாகும் என்பதை நன் கண்டறிந்து கொண்டேன். பெலோவ் தமது கூர்மையான பழுப்பு நிறக் கண்களால் என்னைச் சற்று நேரம் கூர்ந்து நோக்கி ஆராய்ந்து பார்த்தார். “ஒரு எழுத்தாளரை நான் நேருக்கு நேராகக் காண்பது இதுவே முதல் தடவை என்று அவர் பல்லெல்லாம் தெரியப் புன்னகை புரிந்த வாறே கூறினார்: 'நான் உங்கள் புத்தகங்களைப் படித்திருக்கிறேன், பல்வேறு எழுத்தாளர்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன். என்றாலும் உயிருள்ள எழுத்தாளரை நான் இதற்கு முன் நேரில் கண்டதே இல்லை." தமது உயிரை ஒவ்வொரு நாளும் பணயம் வைத்து, எதிரிகளின் அணிகளுக்குப் பின்னால் பதினாறு முறை சென்று திரும்பியிருந்த, அசாதாரணமான துணிச்சலும், சாதுரியமும் மிக்க அந்த மனிதரை நானும் குறுகுறுப்புணர்ச்சியோடு கூர்ந்து கவனித்தேன். அவர் சற்றே உருண்டு திரண்ட தோள்களும், நீண்ட கரங் களும் கொண்டவராக இருந்தார். அவர் மிகவும் அரிதாகத்தான் புன்னகை புரிந்தார்; ஆயினும் அவர் புன்னகை புரியும்போதோ அவரது முகம் ஒரு குழந்தையின் முகம் போல் பிரகாசித்தது; மேலும் இடைவெளிகள் அதிகமாகவுள்ள அவரது - வெள்ளிய பற்களையும் காண முடிந்தது. சாக்லேட் நிறங்கொண்ட அவரது கண்கள் எப்போது பார்த்தாலும் சுருங்கிச் சொருகிக் கொண்டிருந்தன. இராக்காலப் பறவையைப்போல் அவர் பகல் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சுவதாகவும், தமது கனத்த கண்ணிமைகளால் கண்களைத் திரையிட்டு மூடிக் கொள்வதாக வும் தோன்றியது, இருட்டில் அவரால் நன்றாகப் பார்க்க முடியும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அவரது உள்ளங்கைகளை நான் . உற்றுப் பார்த்தேன். . அவற்றில் ஆறிப்போன சிராய்ப்புகளும் புதிய சிராய்ப்புப் புண்களும்

நிறைந்திருந்தன. அவர் தரை மீது அடிக்கடி ஊர்ந்து செல்ல

87