பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பையை இழுத்துப் பறித்தோம்; அதிலிருந்து ஏதேதோ விதமான குறியீடுகளைக் கொண்டிருந்த ஒரு வரைபடத்தையும் வெளியே எடுத்தோம்; அவர்களது ஆயுதங்கள் சில வற்றையும் எடுத்துக் கொண்டோம்; அந்தச் சமயத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வரும் சத்தத்தை நாங்கள் கேட்டோம். கேட்டதும் மீண்டும் பள்ளத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டோம், மோ! ட்டார் சைக்கிளில் வந்த அந்த ஜெர்மானியன் நாச மாக்கப்பட்ட அந்தக் காரின் பக்கம் வந்து, சைக்கிளின் வேகத்தைக் குறைத்ததும், நாங்கள் மூன்றாவது வெடிகுண்டு ஒன்றையும் வீசியெறிந்தோம். அது அந்த ஜெர்மானியனைக் கொன்று விட்டது; மோட்டார் சைக்கிளும் இரண்டு முறை உருண்டு புரண்டது; அதன் இஞ்சினும் ஓய்ந்து அடங்கி விட்டது. நான் மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடினேன்--அது புத்தம் புதியது. போல் இருந்தது. என் நண்பன் வீராதி வீரன்தான்; என்றாலும் மோட்டார் சைக்கிளை ஓட்டுவது எப்படி என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனக்கும். தெரிய வில்லை. என்றாலும், அதனை விட்டு விட்டுச் செல்வதற்குப் பரிதாபமாக இருந்தது. எனவே நாங்கள் அதனை உருட்டிச் கொண்டே சென்றோம்.”: பெலோவ் . இதனை நினைத்துப் பார்த்துப் பல்லைக் காட்டிச் சிரித்தார். “அந்தப் பாழாய்ப் போன மோட்டார் சைக்கிளைக் காட்டின் வழியே உருட்டித் தள்ளிக் கொண்டு வந்ததால் என் கைகள் எல்லாம் மரத்துப் போய் விட்டன; என்றாலும் அதனை எப்படியோ எங்கள் ஆட்களிடம் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பித்து விட்டோம், மறுநாளே நாங்கள் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பி வெளி வந்து விட்டோம், அத்துடன் அந்த மோட்டார் சைக்கிளையும் கொண்டு வந்து விட்டோம். எங்களது சிக்னல் வீரர் இப்போது அதனை ஓட்டிக் கொண்டிருக்கிறார்; புழுதி பறக்க ஓட்டிக் கொண்டு செல்கிறார்! வேவு பார்க்கும் வேலை மிகவும் வேடிக்கையானது என்று நான் நினைத்தேன். எனவே என்னை வேவு பார்க்கும் படையில் மாற்றி விடுமாறு எங்கள் கம்பெனித் தளபதியிடம் கேட்டுக் கொண்டேன். இந்த ஜெர்மானியர்களைப் போய்க் கண்டு வர நான் பலமுறை சென்றிருக்கிறேன். சில சமயங்களில் நாங்கள் நடந்து செல்ல வேண்டும்; சில சமயம் தரையோடு தரையாய்ப் படுத்து உடம்பு, தேய ஊர்ந்து செல்ல வேண்டும்; மற்றும் தரையை அணைத்துப் படுத்துக் கொண்டு, பல மணி நேரத்துக்கு ஆடாமல் அசையாமல் - கிடக்க வேண்டிய சமயங்களும் உண்டு. இவையெல்லாம் எங்களுக்கான அன்றாட வேலைதான் , ஜெர்மானியர்கள் தமது

தளவாடக் கிடங்கு களையும், ரேடியோ நிலையங்களையும், விமான

89