பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கவில்லை. ஏனெனில் என் சட்டைப் பையில் அந்தக் கடிதம் இருந்தது. அதனை இழந்துவிடும் ஆபத்துக்கு நான் உள்ளாகக் கூடாது. பொழுது இருட்டுகிற வரையிலும் நான் ஜெர்மன் பதுங்கு குழிகளுக்கு மிகவும் அருகிலேயே காத்துக் கிடந்தேன். அதன் பின் . பொழுது விடிவதற்கு முன்பே நமது பக்கத்துக்கு வந்து விட்டேன்'. அவ்வளவுதான், அவர் மெளனமானார். வெளிச்சத்துக்கு எதிரே, அவர் தமது கண்களைச் சுருக்கிக் கொண்டவராய், ஒரு காய்ந்த புல்லிதழைத் தமது விரல்களால் திருகியவாறே, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபாட்டு அமர்ந்திருந்தார். பின்னர் தமது சொந்த எண்ணங்களுக்கே 3.சதில்கூறுவது போல் அவர் இவ்வாறு பேச முனைந்தார்: 6 தோழர் எழுத்தாளரே, நான் நினைப்பது என்னவென்றால், நாம் இந்த ஜெர்மானியர்களை முறியடித்து விடுவோம். நமது மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்த எவ்வளவோ தேவைப் படுகிறது. அவர்கள் இன்னும் உண்மையில் கோபம் கொண்டு விடவில்லை. ஆனால் அவர்கள் உரிய முறையில் கோபம் கொண்டு விட்டால், ஜெர்மானியர்களின் கதையே முடிந்து விடும். அவர்களை நாம் நசுக்கியொழித்துவிடுவோம். அது மட்டும் நிச்சயம். நாங்கள் காரை நோக்கி நடந்து வந்தபோது, காயமடைந்த போர் வீரர் ஒருவர் பக்கமாக வந்து விட்டோம். அவர் சில அடிகள் எடுத்து வைத்ததுமே, ஒவ்வொரு முறையும் குடி போதையில் தள்ளாடுவது போல் ஆடிக்கொண்டு, ஆம்புலன்ஸ் வண்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார், அவரது தலையில் கட்டுப் போட்டிருந்தது; ஆயினும் அந்தக் கட்டின் வழியாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவரது கம்பளிக் கோட்டின் காலர் மடிப்புக்களிலும் அதன் கீழ்ப் பகுதியிலும், ஏன் அவரது பூட்சுகளிலும் கூட, காய்ந்து போன ரத்தத்துளிகள் காணப் பட்டன. அவரது கைகளிலும், முழங்கை வரையில் அவரது சட்டைக் கைகளிலும் ரத்தம் தென்பட்டது. அவரது முகம் விசித்திரமான சுண்ணாம்புக் கட்டி போன்ற வெளுப்பைப் பெற்றிருந்தது; அவர் ஏராளமான ரத்தத்தை இழந்து விட்டார் என்பதே இதற்கு அர்த்தமாகும். நாங்கள் அவரை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி விட அவருக்கு உதவ விரும்பினோம்; ஆனால் அவரோ அந்த உதவியை மறுத்து விட்டார்; தாமே போய் ஏறிக் கொள்வதாகக் கூறி விட்டார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் தாம் காயம்பட்டு விட்டதாக அவர் சொன்னார். அவரது தலையிலிருந்து கண்கள்

வரையிலும் அகலமாகக் கட்டுப் போடப்பட்டிருந்தது. எனவே

91