பக்கம்:இதய உணர்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

இதய


திற்குள் அவன் தந்தை இறந்துவிட்டான். தந்தையின் சகோதரியின் கணவனான அந்தோனீன பியன் என்பவன் அப்பொழுது ரோம ராஜ்யத்திற்குச் சக்ரவர்த்தியாயிருந்தான். ‘உலகத்தில் தோன்றிய சான்றோர்களில் இவனே பரிபூரணமானவன்' என்று மாரிஸ் மாட்டர்லிங்க் என்னும் பேரறிஞர் புகழ்கிறார். இத்தகைய சக்ரவர்த்திக்கு இரண்டு அபிமான புத்திரர் இருந்தனர். அவர்களில் நம் மார்க்க ஒளரேலியன் ஒருவன். ஆகையால் மார்க்கன் சிறந்த கல்வியும் அரசர்க்குரிய வித்தைகளும் கற்பிக்கப் பட்டான். மார்க்கன், தனக்குக் கடவுள் அருளால் வாய்த்த தந்தை, தாய், அபிமான பிதா, ஆசிரியர் அனைவரும் வெகு நல்லவர் என்றும், தான் அவர்களால் அடைந்த பயன் அளவற்றது என்றும், அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறியுள்ளான். அவனுக்குக் கல்வி போதித்த ஆசிரியர்களெல்லோரும் அக்காலத்திய அறிஞர்களில் மிகச் சிறந்தவர்கள். அவர்களில் அவனால் பெரிதும் போற்றப்பட்டவன் ருஸ்திகன் என்பவன். அவன் மார்க்கன் சக்ரவர்த்தியான பின்னும் மார்க்கனுக்கு மதிமந்திரியாயிருந்தான். இவ்வளவு சிறந்த ஆசிரியர்களையும் இவ்வளவு சிறந்த மாணவனையும் காண்பது அரிது என மேனாட்டு அறிவாளிகள் கூறுகின்றனர்.

மார்க்கன் முதலில் கவி பாடவும், பிரசங்கம் செய்யவும் கற்றான். ஆனால், வயது பதினொன்று வந்தவுடன், அவைகளில் வெறுப்புற்றுத் தத்துவ சாஸ்திரம் கற்பதில் நாட்டங் கொண்டான். தத்துவ சாஸ்திரிகளைப்போல சாதாரண உடை உடுத்தி, ஊண் மிகச் சுருக்கி, படிப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/14&oldid=1105433" இலிருந்து மீள்விக்கப்பட்டது