பக்கம்:இதய உணர்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

13


அதிகச் சிரமம் மேற்கொண்டான். அதனால் அவனுடைய தேக சுகமும் சிறிது குறைந்திருந்தது. பின்னர் அரசர்க்கு அவசியந் தெரியவேண்டிய சட்டக் கல்வியையும் ஆயுதப் பயிற்சியையும் மேற்கொண்டான்.

இருபத்தைந்தாவது வயதில் மார்க்கன் தன் மாமனும் அபிமான பிதாவுமான சக்ரவர்த்தி அந்தோனீன பியனின் புத்திரியாகிய பெளஸ்தீனா என்னும் அரசிளங் குமரியை மணந்தான். சக்ரவர்த்தி அவனுக்கு ரோம் ராஜ்யத்தில் யுவராஜாவுக்கு வழக்கமாக வழங்கும் ஸீஸர் என்னும் நாமம் சூட்டி, ராஜ்ய நிர்வாகக் காரியங்களிற் பலவற்றை அவனிடம் ஒப்புவித்தான். சக்ரவர்த்தியின் மரணகால பரியந்தம் இருவரும் மன ஒற்றுமை மாறமல் நட்புடன் வாழ்ந்து வந்தனர்.

161-ஆம் வருஷத்தில் சக்ரவர்த்தி பியன் இறந்து விடவே மந்திராலோசனை சபையார் மார்க்கனைச் சக்கரவர்த்தி பதவியை ஏற்று ராஜ்யபாரத்தை நிர்வகிக்கும்படி கேட்டனர். ஆனால், முன்சொன்னபடி பியனுக்கு வேரன் என்று மற்றோர் அபிமான புத்திரன் இருந்தபடியால் அவனும் தன்னோடு கூடவே சிங்காதனம் ஏறவேண்டுமென்று மார்க்கன் வற்புறுத்தினான். கடைசியாக மந்திராலோசனை சபையாரைத் தனக்கு இணங்கும்படியும் செய்துவிட்டான். ஆகவே இருவரும் சம உரிமையுடன் சக்ரவர்த்திகளாக இருந்துகொண்டு ராஜ்யத்தை ஆள ஆரம்பித்தனர். வேரன் போகாதுரனாகவும் பெரு நோக்கற்றவனாகவும் இருந்தும், மார்க்கன் அவனுடைய குற்றங்களைப் பாராட்டாமல் அவனுடைய தவறுகளால் வரும் திமைகளைப் பொறுமையோடும் சாமர்த்தியத் தோடும் விலக்கிக்கொண்டு, அவனோடுகூடச் சுமுகமாகவே இருந்துவந்தான். சுமார் எட்டு வருஷங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/15&oldid=1105437" இலிருந்து மீள்விக்கப்பட்டது