14
இதய
இவ்வாறு நடந்துவந்ததது. ஒன்பதாவது வருஷத்தில் வேரன் இறந்தான். அதன் பிறகு மார்க்கன் ஏகச் சக்கரவர்த்தியாக ஆட்சியை நடத்திவந்தான்.
161-ஆம் வருஷத்தில் ராஜ்யபாரம் வகிக்க ஆரம்பித்த நாள்முதல் அவனுடைய ஆயுள் இறுதிவரை, மார்க்கன் தன் விருப்பத்துக்கு மாறாக, தனது காலத்தை யுத்தங்களிலேயே கழிக்கும்படி நேர்ந்தது. 175-ஆம் வருஷத்தில் ஆவீதிய காள்ஸியன் என்னும் ரோமதளபதி ஒருவன் ஆசியாவில் சக்ரவர்த்திக்கு எதிராகக் கலகம் செய்தான். ஆனால் அவனைச் சக்ரவர்த்தியின் அதிகாரிகளில் சிலர் கொன்றுவிட்டனர். அதைக் கேட்டவுடன் மார்க்கன் மிகவும் துக்கித்தான். “அவனை மன்னிப்பதால் வரக்கூடிய ஆனந்தம் கைநழுவிப் போனமைபற்றி வருந்துகிறேன் !” என்று சொன்னான். இத்தகைய நல்லெண்ணத்தோடு மாத்திரம் நில்லாமல், மார்க்கன், அக்காஸ்ஸியனின் குடும்பத்தாரையும் நண்பரையும் மிகப் பட்சமாகவே நடத்தி, தன் அருளுடைமையை விளக்கிச்சிறந்தான்.
175-ஆம் வருஷத்தில் போர் நிமித்தமாக வெளியூருக்குச் சென்றிருந்த காலத்தில் மார்க்கன் தன் அருமை மனைவியை இழந்துவிட்டான். அவன் அவளிடம் அதிகமான அன்பு வைத்திருந்தான். "பணிவுடையாள், ஆடம்பரமற்றவள், அன்புடையாள் " என்று அவளைப் புகழ்ந்துரைக்கிறான். ஆகவே, அவள் பிரிவை ஆற்றமல் மிகுந்த கிலேசமுற்றான்.
தன் தந்தை பியன் தன்னே அரச நிர்வாகத்தில் சேர்த்துக்கொண்டது போல் தானும் மறு வருஷத்தில் தன் மகன் கொம்மோதன் என்பவனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். மிகுந்த ஒழுக்க சீலனான மார்க்கனுக்குப் பிறந்தும், அவனோடு சேர்ந்து வாழ்ந்தும், கொம்மோதன்