உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

15


தந்தை இறந்தபின் துன்மார்க்கனாய்விட்டான். ஆனால் சிறுவயதில், அதாவது 19-ஆவது வயதில், தந்தையின் மரணத்தால் தனியே விடப்பட்டதனால் அவன் அவ்விதம் துன்மார்க்கனாயிருக்கக்கூடும். மேலும் சன்மார்க்கருக்குத் துன்மார்க்கர் பிறப்பதை அநுபவத்தில் பார்த்திருக்கிறோமல்லவா?

மார்க்க ஒளரேலியன் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன் அல்லன். அக்காலத்தில் ரோம் ராஜ்யத்தில் பெரும்பான்மையோருடைய மதம் வேறு. அப்பொழுதுதான் கிறிஸ்தவ மதம் சிறிது சிறிதாய்ப் பரவிக்கொண்டிருந்தது. ஆனால் பொதுஜனங்கள் அதை வெறுத்துக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்தனர். அரசரும் பிறரும் அவர்களால் உண்மை ஞானத்துக்கும், பொது வாழ்வுக்கும், ராஜ்யத்துக்கும் பெருங் கேடே விளையுமென்று உண்மையாய் நம்பியிருந்தனர். இந்நிலைமையில் மார்க்கனும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும்படி கட்டளையிட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், ஆசிரியர்களில் சிலர் அவன் அவ்விதம் செய்தனன் என்றும், சிலர் அவ்விதம் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். இச்சிறு நூலில் அதைப்பற்றி விவரித்து நிர்ணயித் தெழுதவேண்டியதில்லை. ஒன்றுமட்டும் சொல்லலாம்: கிறிஸ்து நாதரின் ஹிதோபதேசம் முழுவதும் அவனுக்குத் தெரிந்திருந்தால், அவன் கிறிஸ்தவருக்கு யாதொரு கேடும் செய்ய ஒருப்பட்டிரான் என்பது நிச்சயம். ஏனெனில் பகைவரை மன்னித்தலையே தலைசிறந்த தர்மமெனக் கிறிஸ்து நாதர் கூறியதுபோல் இவனும் கூறி, அவ்விதமே நடந்தும் வந்தவன்.

மார்க்கன், கி. பி. 179-ஆம் வருஷத்தில், அதாவது தன் ஐம்பத்தொன்பதாவது வயதில், பாசறையிலே இறந்தான். அவன் இறக்கும் சமயத்தில் அவனைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/17&oldid=1105515" இலிருந்து மீள்விக்கப்பட்டது