உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒளரேலியனுடைய சித்தாந்தம்

மார்க்க ஒளரேலியனுடைய மணி மொழிகளில் உயர்ந்த அறங்களும், உன்னதமான உபதேசங்களும் அடங்கியுள்ளன. ஆனால் உலக வியவகாரங்களில் கலந்து கொள்ளாமல் விலகி நின்ற பெரியோர்களுடைய போதனைகள் எத்துணைச் சிறந்தனவாக இருந்தபோதிலும் நீண்டநாள் மக்கள் நினைவில் நிற்பதில்லை. “தாம் உரைப்பதற்குத் தக நிற்கவும் அதற்காக உயிர் துறக்கச் சித்தமாகவும் இல்லாத பெரியோர் அறவுரைகளால் யாது பயனும் உண்டாகமாட்டாது” என்று ஒளரேலியன் கூறுகிறான். அவன் தன்னுடைய சித்தாந்தத்தின்படியே ஒழுகிய சான்றோன் ஆவன். அவனுடைய சித்தாந்தம்யாது?

மனிதன் தன்னுடைய இயற்கைக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைக்கும் உகந்தவாறு நடப்பதே வாழ்வின் லட்சியமாகும். அவ்வாறு நடப்பவரே உலகத்தில் சாந்தியும், சமாதானமும், சந்தோஷமு மடைவர்.

மனிதன் தன்னுடைய இயற்கைக்கு உகந்தவாறு நடக்க விரும்பினால் அவன் தன்னுடைய இதயத்தில் கோயில் கொண்டுள்ள பகுத்தறிவு என்னும் கடவுள் காட்டும் வழியிலேயே நடக்க வேண்டும். பகுத்தறிவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/20&oldid=1105518" இலிருந்து மீள்விக்கப்பட்டது