பக்கம்:இதய உணர்ச்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதய உணர்ச்சி

19


முரணாக நடப்பவன் மனித இயற்கைக்கு முரணாக நடப்பவனே ஆவான்.

மனிதன் பிரபஞ்சத்தின் இயல்புக்கும் தக்கவாறு வாழவேண்டியவனாவான். பிரபஞ்சத்துக்குத் தக்கவாறு நடப்பதற்காக அவன் எந்தச் சமூகத்தில் பிறந்திருக்கின்றனோ அந்தச் சமூகத்துக்கும் அதன் மூலம் மனித சமுகத்திற்கும் உகந்தவாறு தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளுதல் கடன். மக்களை விட்டுப் பிரிந்து நின்று தனியாக வாழ்தல் கூடாது. அப்படித் தனியாக வாழ்தல் சோம்பற்கும் சுகபோகத்துக்கு மாயினும், சிந்தனைக்கும் யோகத்துக்கு மாயினும் தவறேயாகும். செடிகளும் மிருகங்களும் தமக்குக் கிடைத்துள்ள சக்திகளை உபயோகிப்பது போலவே மனிதனும் தனக்குக் கிடைத்துள்ள சக்திகளை உபயோகித்தல் வேண்டும்.

மனிதன் தனியே வாழாமல் சமூகத்தில் வாழ வேண்டியதற்குரிய காரணம் யாது? மக்கள் எல்லோரும் இரத்த உறவோடு அறிவு உறவும் உடையவர்கள். அதனால் உடம்பிலுள்ள உறுப்புக்கள் போல ஒத்துழைக்க வேண்டியதே மனிதனுடைய இயல்பாகும். ஒருவர்க்கொருவர் விரோதமாக நடப்பது இயற்கைகக்கு விரோதமேயாகும். அத்துடன் அன்பு செய்வதே பகுத்தறிவின் பண்பாகும்.

நாம் அன்பு செய்தாலும் நமக்குப் பிறர் தீங்கு செய்தால் என் செய்வது? பிறர் தீங்கு செய்தால் உடனே நமக்குக் கோபமும் எரிச்சலும் உண்டாகும். அது இயற்கையே. ஆனால் அவரைத் தண்டிப்பதற்குரிய தலை சிறந்த முறை அவரைப் போல் ஆகாமல் இருப்பதேயாகும். பிறர் தீங்கு செய்ததாக மனத்தில் எண்ணம் உகிக்குமேயானல் உடனே அவன் அறிந்து செய்தானா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/21&oldid=1105519" இலிருந்து மீள்விக்கப்பட்டது