பக்கம்:இதய உணர்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இதய உணர்ச்சி


அறியாமல் செய்தானா என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்தால் அப்போது கோபம் போய் இரக்கம் உண்டாகும்.

தங்களுடைய நலத்துக்கும் சமூகத்தின் நலத்துக்கும் முரண்படாதவாறு வாழ விரும்புகிறவன் சிறந்த ஒழுக்கத்துக்கு உகந்த லட்சியங்களை உடையவனாக இருத்தல் இன்றியமையாததாகும்.

அத்தகைய இலட்சியங்கள் உடையவன் தன் நலமும், சமூகநலமும் முரண்பட்டவையல்ல, ஒன்றேயென்று கண்டு கொள்ளுவான். தேனீச் சமூகத்துக்கு நல மல்லாதது தேனீக்கும் நலமல்லாததே.

அதனால் தான் ஒளரேலியன் “சமூக நலனுக்கும் அறிவுக்கும் தக்கவாறு நடப்பதே என்னுடைய இயல்பு”. ஆதலால் என்னுடைய ஊரும், நாடும் மார்க்கன் என்ற நிலைமையில் ரோமாபுரி; மனிதன் என்ற நிலைமையில் உலகம். இந்த இரண்டுக்கும் ஏற்றதே எனக்கும் ஏற்றதாகும்’ என்று கூறுகின்றன்.

ஆதலால் மனிதன் அறிவை ஐயம், திரிபு இல்லாதபடி தூயதாக வைத்துக்கொள்ள வேண்டும்; அறிவுக்கு முரணான ஆசாபாசங்களை அகற்றிவிட வேண்டும். இடை விடாது மக்கள் நலத்துக்கு உகந்த செயல்களிலேயே ஈடுபடவேண்டும். இவ்வாறு இயற்கைக்கு ஏற்றவாறு நடப்பதே மனித வாழ்வின் குறிக்கோளும், பயனுமாகும். அறத்தின் பயன் அறவாழ்க்கையேயன்றி வேறன்று.

இது தான் மார்க்க ஒளரேலியனுடைய சித்தாந்தத்தின் சுருக்கம். எத்தனையோ பெரியோர் இத்தகைய அறவுரைகள் கூறியிருந்த போதிலும் இவனைப்போல் அதற்குத் தக நின்ற உத்தமர்கள் வெகு சிலரே ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/22&oldid=1105520" இலிருந்து மீள்விக்கப்பட்டது