பக்கம்:இதய உணர்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

23


தருவனவாய் இருக்கின்றன. வளைந்து தொங்கும் தானியக் கதிர்கள் - சிம்மத்தின் கண்ணிமைகள் - கரடியின் வாய் நுரை - தனித்தனியே நோக்கும் பொழுது அழகில்லாதனவாகக் காணப்பட்டாலும், அவை இயற்கையில் உண்டான பொருள்களின் விளைவுகளே. ஆகையால் அழகாகவும் தோன்றுகின்றன, மனத்திற்கு மகிழ்ச்சியும் தருகின்றன. அதுபோல இயற்கையையும் இயற்கை விளைவுகளையும் உள்ளவாறு உணர்ந்தவனே முதியவர்களிடமும் ஒருவித அழகு உண்டென்று அறியக்கூடும்; இளையோரின் அழகையும் அவனே களங்கமற்ற இதயத்தோடு அநுபவிக்கக்கூடும்.

5

★ ★ ★

லி பீடத்தின்பேரில் பல சாம்பிராணித் துணுக்குகள் விழுந்துவிடுகின்றன. ஒன்று முன் விழும், ஒன்று பின் விழும். ஆனால் அவற்றுள் வித்தியாசம் என்ன இருக்கிறது ?

6

★ ★ ★

னச் சாந்தியோடு நின்று தேவ வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய சாதனங்கள் மிகமிகச் சிலவேயாகும்.

7

★ ★ ★

பிறர் மனத்தகத்தே நிகழ்கின்றவற்றைத் தாம் அறியாமையால் துன்புறுபவரை யாம் கண்டதில்லை. ஆனால் தம் மனத்தகத்தே நிகழ்கின்றவற்றை உன்னிப்

பாராதவர் என்றும் இன்பம் உறுதல் இலர்.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/25&oldid=1105773" இலிருந்து மீள்விக்கப்பட்டது