26
இதய
முடியாது என்றும், மனிதர் இஷ்டத்தோடு தீங்கிழைக்கிறதில்லை என்றும் நினைத்துக்கொள். இரண்டு தத்துவங்களைச் சமய சஞ்சீவியான தத்துவங்களாகப் பாவித்து மனத்தில் அவைகளை எப்பொழுதும் நிறுத்திக் கொண்டிரு. அவைகளில் ஒன்று இதுவாகும். அதாவது, உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் ஆன்மாவுக்குப் புறம்பானவை ஆதலால் எப்பொருளுக்கும் ஆன்மாவைப் பாதிக்கும் ஆற்றலில்லை. நம் மனச் சஞ்சலங்களெல்லாம் நம் மனத்தினுள் நின்று எழும் தோற்றங்களினின்றே எழுகின்றன. மற்றத் தத்துவத்தை இதுவென்று கூறலாகும். அதாவது நீ பார்க்கிற இவையெல்லாம் க்ஷண நேரத்தில் மாறுந்தன்மை உடையன. இத்தகைய மாறுதல்கள் இதற்குமுன் எத்தனை பார்த்திருக்கிறாய்
என்பதை யோசித்துப்பார். உலகம் நிலையற்றது, என்றும் மாறுந் தன்மையது. வாழ்க்கை என்பது அறிவின் இயக்கமே யன்றி வேறில்லை.
15
அகங்கார மமகாரங்களை நீ நீக்கிவிட்டாயானால், “எனக்கு இன்னான் துன்பிழைத்துவிட்டான்” என்கிற எண்ணமே உனக்கு இல்லாமல் போய்விடும். “எனக்கு ஒருவன் துன்பிழைத்துவிட்டான்” என்கிற எண்ணம் இல்லாமற் போய்விட்டதானால் துன்பமே இல்லாது போய்விடும்.
16
உனக்குத் தீமை செய்பவன் அதைப்பற்றி எவ்விதம் கருதுகிறானோ அதுபோலேனும், அல்லது நீ அதைப் பற்றி எவ்விதம் கருதவேண்டுமென்று அவன் விரும்பு