பக்கம்:இதய உணர்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

27


கிறானோ அதுபோலேனும் நீ கருதாதே. ஆனால், அது உண்மையில் எவ்விதம் இருக்குமோ அவ்விதமே நீ அதைப்பற்றிக் கருதுவாய்.

17

★ ★ ★

ப்பொழுதும் உன் வாழ்வில் வழிகாட்டிகளாக இந்த இரண்டு விதிகளைத் தயாராய் வைத்திரு- ஒன்று, உன்னை ஆள்வதும் உனக்கு உத்திரவு இடுவதுமான உன் மெய்யறிவு கூறுவதையே செய்வது.-மற்றொன்று, யாரேனும் உன் அபிப்பிராயம் தவறு என்று சொல்லித் திருத்தினால் உன் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்வது. ஆனால், அபிப்பிராயத்தை மாற்றுவதால் சுகம் வரும் என்றோ புகழ் கிடைக்கும் என்றோ கருதாமல், நியாயமானது, பொது நன்மைக் கேற்றது என்று கருதியே அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்.

18

★ ★ ★

தினாயிர வருஷகாலம் உயிரோடிருக்கப் போவதாக எண்ணி நடவாதே. மரணம் உனக்காக எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கிறது. உடலில் உயிருள்ள பொழுதே நல்வினை செய். உயிர் போனபிறகு உனக்கு எதும் செய்யச் சாத்தியமிராது.

19

★ ★ ★

பிறர் நினைப்பதையும், சொல்வதையும், செய்வதையும் கருதாமல், தான் செய்வது நீதியும் நெறியும் பொருந்தியதா என்று மட்டும் கருதுபவனை விட்டகலும் துன்பங்கள் பல. பிறர் துன்மார்க்கத்தை லட்சியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/29&oldid=1105798" இலிருந்து மீள்விக்கப்பட்டது