பக்கம்:இதய உணர்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

இதய


செய்யாதே. நீ மாத்திரம் நெறியினின்று ஒரு மயிரிழையேனும் பிறழாமல் நட.

20

★ ★ ★

“ மன அமைதி வேண்டுமானால் உன் வேலைகள் மிகச் சிலவாக இருக்கட்டும்” என்று ஒரு ஞானி கூறுகிறார். ஆனால் இது அதைவிட மேலான விதியாயிராதோ என்று யோசித்துப் பார்: அதாவது - “இன்றியமையாத காரியங்களை, பொது நன்மையைக் கவனிப்பதே இயற்கையாகவுடைய உன் நல்லறிவு கூறும் காரியங்களை மாத்திரம் அந்நல்லறிவு கூறும் முறையில் செய்வாய்”.-இதனால் வேலைகள் குறைவதால் வரும் அமைதியோடு அவற்றை நன்றாய்ச் செய்வதால் வரும் அமைதியும் கிடைக்கும். அனாவசியமான செய்கைகளைச் செய்யாமலிருப்பதோடு அனாவசியமான நினைவுகளையும் நினைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் அவசியமற்ற செய்கைகள் நிகழா.

21

★ ★ ★

வனேனும் உனக்குத் தீங்கிழைக்கின்றானா? அவன் உண்மையில் உனக்குத் தீங்கிழைக்கவில்லை. தனக்கே தான் கேடு சூழ்ந்து கொள்கிறான்.

22

★ ★ ★

பிறன் கையை எதிர்பார்ப்பவன்தான் ஏழை. தன்

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் தன் ஆத்மாவினுள்ளே சேமித்து வையாதவன் தான் வறிஞன்.

23

★ ★ ★

இப்பொழுது நிகழ்பவை இனி நிகழ்பவைகளுக்கு ஒருவிதத்தில் வித்தாகும்.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/30&oldid=1105806" இலிருந்து மீள்விக்கப்பட்டது