உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

29


“ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்லும் சிறிய ஆவி“[1] என்று எபிக்தெத்தன் அடிக்கடி கூறுவான்.

25

★ ★ ★

லைகள் ஓயாமல் மோதும் கற்பாறை போன்று இரு. அது உறுதியாய் நின்று தன்னேச் சூழ்ந்துள்ள ஜலத்தின் வேகத்தை அடக்குகின்றது.

26

★ ★ ★

ந்தக் கஷ்டம் எனக்கு நிகழ்ந்துவிட்டதென்று துன்புறுகின்றேனா? இல்லை. இக்கஷ்டம் நிகழ்ந்தால் எனக்கென்ன? நிகழ்காலத்தில் என்னை நசுக்கக்கூடியது ஒன்றுமில்லை. வருங்காலத்தில் நான் பயப்படக்கூடியது ஒன்றுமில்லை. ஆதலின் எனக்குத் துன்பம் ஏது?

27

★ ★ ★

ஞ்சலம் ஏற்படும் போதெல்லாம், “இஃது ஒரு கஷ்டமன்று; மற்று இதைத் தீரத்தோடு சகிப்பது ஒரு நல்லதிர்ஷ்டமே யாகும் என்று ஞாபகப்படுத்திக் கொள்.

28

★ ★ ★

ண்பதற்கும் குடிப்பதற்கும் இயற்கை ஓர் எல்லை வைத்திருக்கிறாள். ஆனால், நீ அதை மீறிவிடுகிறாய்.


  1. உடலே நித்தியமானது என்று பேதைமையால் எண்ணியிருப்போருக்கு யாக்கை நிலையாமையை இதைவிடச் சிறந்த முறையில் தெளிவுபடுத்த இயலாது. உடலைத் தாங்கித் திரியும் ஆன்மா சவம் சுமக்கும் உயிராகக் கூறப்படுகிறது. ஆன்மா பிரியும்பொழுதுதான் உடல் சவமாகிறது எனினும், உடலின் சிறுமைகளையும் அழிவின் நிச்சயத்தையும் கருதி, அது எப்பொழுதுமே பிரேதம் என்று கூறப்படுகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/31&oldid=1105832" இலிருந்து மீள்விக்கப்பட்டது