உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

33


அதற்கும் சொல்லுவேன், அரண்மனையிலுங்கூட நீ யோக்கியமாக வாழக்கூடும்.

36

★ ★ ★

சாத்தியமானதை நாடுவது பைத்தியமாகும்; ஆனால், தீயோர் அவ்விதம் நாடாமல் இருக்க முடியாது.

37

★ ★ ★

ருவன் எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவுக்கு மேலான கஷ்டம் அவனுக்கு ஏற்படுவதில்லை.

38

★ ★ ★

ராஜ்யத்திற்கு எதனால் தீங்கு விளையாதோ அது தனிப் பிரஜை எவனுக்கும் கேடு செய்யாது. ராஜ்யத்திற்கும் யாரேனும் ஒருவனால் ஒரு தீங்கு செய்யப்பட்டால் அவன்மீது கோபம் கொள்ளாதே. அவன் செய்யும் தவறை அவனுக்கு எடுத்துக் காட்டு.

39

★ ★ ★

திர்ஷ்டசாலி’ என்றால் நல்லதிர்ஷ்டத்தைத் தேடிக்கொண்டவன் என்றே பொருள். ‘அதிர்ஷ்டம்’ என்பது நல்லெண்ணங்கள், நல்லுணர்ச்சிகள், நற்செய்கைகளேயாகும்.

40

★ ★ ★

தீமை செய்தாரை ஒறுத்தற்குச் சிறந்த மார்க்கம் அவர் போல் நடவாதிருப்பதேயாகும்.

41

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/35&oldid=1105870" இலிருந்து மீள்விக்கப்பட்டது