உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இதய


சாந்தியும் திருப்தியுமுற்று, உடனே அத்தடையை வேறோர் நற்குணத்தை அனுஷ்டிப்பதற்கு உதவியாகச் செய்து கொள்வோம். நாம் செய்யமுடியாத காரியத்தைச் செய்ய விரும்பவில்லை, செய்யக்கூடிய காரியத்தையே செய்ய முயன்றோம் என்று ஞாபகத்திலும் வைத்துக்கொள்வோம்.

50

★ ★ ★

புகழை விரும்புபவன் பிறருடைய தாளாண்மையைத் தனக்குத் தாயகமாகக் கருதுகிறான். இன்பத்தை விழைபவன் புலன் நுகர்ச்சியையே தன் நன்மையாகக் கருதுகிறான். ஆனால், அறிவுள்ளவனோ தன்னுடைய முயற்சியையே தனக்குத் தாயகமாகக் கருதுகிறான்.

51

★ ★ ★

க்கள் சிறப்பெல்லாம் அவர் விரும்பி நாடும் விஷயங்களின் சிறப்பளவே யாகும்.

52

★ ★ ★

தீங்கிழைத்தவரிடத்திலும் அன்பு காட்டல் மனிதன் ஒருவனுக்குத்தான் சாத்தியமாகும். ஒருவன் நமக்குத் தீங்கிழைக்கும் பொழுது, அவன் நமக்குச் சகோதரன்தான் என்றும், அறியாமையால்தான் அவன் அவ்விதம் செய்கிறான் என்றும், அவனும் நாமும் வெகு சிக்கிரத்தில் இறந்து ஒழிவோம் என்றும், அவன் தீங்கிழைத்தும் நம் ஆன்மாவிற்கு யாதொரு பங்கமும் ஏற்படவில்லை என்றும் நாம் கருதினால் உடனே அவன்பால் நமக்கு அன்பு பிறக்கும்.

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/38&oldid=1105881" இலிருந்து மீள்விக்கப்பட்டது