உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணரிச்சி

37


குற்றம் செய்யும்பொழுது குற்றம் செய்கிறோம் என்று உணரும் அறிவு போய்விட்டால், அதன்பின் உயிர் வாழ்வதால் என்ன பயன்?

54

★ ★ ★

ருவன் உனக்குத் தீங்கு செயதால், உடனே தர்ம அதர்மத்தைப்பற்றி அவன் என்ன அபிப்பிராயம் வைத்துக்கொண்டு அத்தீங்கு செய்தான் என்று யோசித்துப்பார். அவ்வாறு யோசித்துப் பார்த்தால், உனக்கு ஆச்சரியமாவது கோபமாவது வராது ; அவனிடம் உனக்கு இரக்கமே உண்டாகும். ஏனெனில் யோசித்துப் பார்க்கும்பொழுது அவன் செய்ததையோ அல்லது அதைப் போன்ற ஒன்றையோ நீயே நல்லதென்று கருதலாம் ; அப்படியானால் அவனை மன்னிப்பது உன் கடன். அல்லது அவன் தர்மம் என்று நினைப்பதை நீ அதர்மமாகவும், அவன் அதர்மம் என்று நினைப்பதை நீ தர்மமாகவும் கருதலாம். அப்படியானால் தர்ம அதர்மப் பகுத்தறிவு இல்லாத அவனைத் துவேஷிக்க மாட்டாய்.

55

★ ★ ★

ன்னிடம் இருப்பவைகளைப்பற்றி நினைக்கும் அளவு உன்னிடம் இல்லாதவைகளைப்பற்றி நினையாதே. உன்னிடம் இருப்பவைகளிலும் சிறந்தவைகளைத் தேர்ந்து அவைகள் உன்னிடம் இல்லாவிட்டால் எவ்வளவு ஆவலுடன் அவைகளை நீ தேடுவாய் என்று சிந்தித்துப் பார். ஆயினும் அப்படிச் சந்தோஷப்படுத்திக் கொண்டு அவைகளை அளவுக்கு மிஞ்சி மதித்து விடாதே ; மதித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/39&oldid=1105887" இலிருந்து மீள்விக்கப்பட்டது