உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மூன்றாம், நான்காம் பதிப்புகள்

1951

உரிமை



ஐந்தாம் பதிப்பு

1952

ஆசிரியருடையது


பொ. திரு கூடசுந்தரம்
எம். ஏ. பி. எல்.


1891-ம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதல் முதற் பரிசு பெற்றார். எம். ஏ.இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-ல் வக்கீல் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டிநாட்டிலும் காந்தீய இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிகள் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். திருநெல்வேலி நகரசபையில் அங்கத்தினராகவும், தேவ கோட்டை நகர சபையில் வைஸ்சேர்மனகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குக் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர் கோவிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினர். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராகயிருக்கார் ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்திய முடையவர். சென்னை செனட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாக பத்து நூல்களும், மொழி பெயர்ப்பாக பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர், படிக்க வேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்கு பரிசு அளித்துள்ளார் சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்கு மாறு எழுதக்கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர். எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையு முடையவர்.


ராஜன் எலக்டிரிக் பிரஸ், சென்னை-1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/4&oldid=1105345" இலிருந்து மீள்விக்கப்பட்டது