உணர்ச்சி
39
இதைவிட ஹாஸியகரமான விஷயம் வேறென்ன? தன் தீக்குணத்தினின்று தப்பி ஓடுவது சாத்தியமாயிருக்க ஒருவன் அதனின்று தப்பி ஓடப் பார்க்காமல், தப்பி ஓடுதல் அசாத்தியமாயிருக்கிற பிறனுடைய தீமையினின்றும் தப்பி ஓடப் பார்க்கிறான்.
62
நீ ஒருவனுக்கு ஒரு நன்மை செய்கிறாய், அவன் அந்த நன்மையைப் பெறுகிறான். இவ்விரண்டு நன்மைகளும் போதாவோ? மூன்றாவது ஒன்றை ஏன் எதிர் பார்க்கிறாய்?
மூடர்தான் புகழாவது கைம்மாறாவது எதிர்பார்ப்பார்.
63
பயனுடையதைப் பெறுவத்ற்கு யாரும் சலிப்பதில்லை. இயற்கையின்படி நடப்பதுதான் பயன் தருவதாகும். ஆயின், பிறர்க்கு உபகாரம் செய்து அதனால் ஆன்ம லாபம் பெறுவதற்கு நீ சலியாதே.
64
பிறர் என்ன நினைப்பர் என்ற விசாரத்தை விட்டுவிடு. உன் மெய் இயல்பாகிய ஆன்மா கூறுவது போல் இனி வாழ்வதிலேயே திருப்தியுற்றிரு. ஆகையின் உன் ஆன்மா கூறுவதைக் கவனி; வேறொன்றிலும் உன் மனத்தைச் சிதற விடாதே.
இன்பத்தை எங்கு தேடி அலைந்தாலும் அதைத் தர்க்கத்திலும் காண முடியாது, புகழிலும் காண முடியாது, செல்வத்திலும் காண முடியாது, உலகானு பவத்