பக்கம்:இதய உணர்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

இதய


திலும்திலும் காண முடியாது. மனிதனுடைய மெய் இயல்பு கூறுவதுபோல் நடப்பதிலேயேதான் இன்பத்தைக் காண முடியும்.

அந்த மெய் இயல்பு கூறுவது என்ன? மனிதனை நீதிமானாகவும் ஆண்மையுடையவனாகவும் இச்சையடக்க முள்ளுவனாகவும் எது செய்கிறதோ அதுவே அவனுக்கு உறுதி பயப்பது என்பதாம்.

65

★ ★ ★

டிக்க நேரமில்லை என்று கூறுகிறாய். இருக்கட்டும். ஆனால் அகந்தையை அடக்கவும், இன்ப துன்பங்களை அலட்சியம் செய்யவும், புகழை விரும்பாதிருக்கவும்,

மூடர்களையும் நன்றி கொல்பவர்களையும் வெறுக்காதிருக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் நேரமில்லை என்று நீ கூற முடியாது.

66

★ ★ ★

பச்சாத்தாபம் என்பது பயன் தருவ தொன்றை அலட்சியம் செய்ததற்காகத் தன்னைத் தான் கடிந்து கொள்வதாகும். ஆனால் நல்ல காரியம்தான் பயன் தரும். முற்றிலும் நல்ல மனிதன் அதையே நாடுவான். அத்தகைய மனிதன் உடற் சுகத்தைத் தவிர்த்ததற்காக ஒரு பொழுதும் பச்சாத்தாபப்படமாட்டான். ஆகையால் உடற் சுகம் நல்லதுமன்று, பயன் தருவதுமன்று.

67

★ ★ ★

குற்றத்தைக் குற்றமன்று என்று சாதிப்பதுதான் சுதந்திரம் என நினைக்கிறாய். ஆனால் உன் குற்றத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/42&oldid=1105912" இலிருந்து மீள்விக்கப்பட்டது