உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

43


நிகழும். அவ்விதமே ஒவ்வொன்றுக்கும் அதனதன் இயற்கைக்கு ஒத்ததே வழக்கமாக நிகழுமானால் நீ ஏன் முறையிடுகின்றாய் மனிதனாகிய உன்னால் பொறுக்க முடியாத தொன்றும் உலக இயற்கையில் நிகழாது.

74

★ ★ ★

னக்கு வருத்தம் உண்டாக்கும் சம்பவங்கள் நிகழுங் காலத்தில் முதல் தோற்றம் உனக்கு என்ன அறிவிக்கிறதோ அதற்கு அதிகமாக ஒன்றும் நினைத்துக் கொள்ளாதே.

உதரணமாக ஒருவன் உன்னே இழித்து உரைத்ததாக வேறொருவன் உன்னிடம் சொல்லுகிறான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அதிலிருந்து உனக்குத் தீங்கு விதைத்ததாக அவன் சொல்வதில்லை.

என் குழந்தை வியாதியாயிருக்கிறதை காண்கிறேன்.ஆனால் அதற்கு அபாயமா யிருக்கிறது என்று என் பொறிகள் எங்கே எனக்கு அறிவிக்கின்றன?

ஆதலால் இத்தகைய சந்தர்ப்பங்களில் முதல் தோற்றத்தோடேயே எப்பொழுதும் நின்றுவிடு. உன் மனத்தில் எழுகிற எண்ணங்களில் எதையும் நீயாகக் கொண்டுபோய் அதனோடு சேர்க்காதே. அவ்விதம் சேர்க்காமல் இருந்தாயானால் உனக்கு ஒரு துன்பமும் ஏற்படாது.

75

★ ★ ★

பாகற்காய் கசக்கிறது; அதை எறிந்துவிடு. பாதையில் முட்செடிகள் உள ; அவைகளை விட்டு விலகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/45&oldid=1105920" இலிருந்து மீள்விக்கப்பட்டது