44
இதய
நட. இது போதும். ஏன் இத்தகைய பொருள்கள் உலகில் உண்டாக்கப்பட்டன என்று கேட்கப்புகாதே
76
மனிதர் உன்னைக் கொல்லலாம், வெட்டலாம், சபிக்கலாம். ஆனால் உன் மனம் சுத்தமாகவும் அடக்கமாகவும், நீதியாகவும், அறிவுள்ளதாகவும் இருப்பதை அவர்கள் செய்கை எவ்வாறு கடுக்க முடியும் ?
சுத்தமான தெளிந்த நீரையுடைய சுனையொன்றின் அருகே நின்று அதைச் சபித்தாலும் அது பருகத் தக்க நீரைத் தராது இருந்துவிடாது. அதனுள் அசுத்தங்களை எறிந்தாலுங்கூட அது அவற்றை வெளியே தள்ளி விட்டுத் தான் சுத்தமாகவே விளங்கி நிற்கும்.
நிரந்தரமாக ஆனந்தத்தைப் பெருக்கிக்கொண்டே வரக்கூடிய அருவி உன்னுள்ளே எவ்வாறு உண்டாகும்? அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, ஒவ்வொரு நிமிஷமும் உன்னிடத்தில் சுதந்திரமும், திருப்தியும், அடக்கமும், ஆடம்பரமின்மையும் உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.
76
உலகம் இன்னது என்பதை அறியாதவனுக்கு உலகத்தில் அவனுடைய ஸ்தானம் இன்னது என்றும் தெரியாது. உலகம் எதற்காகத் தோன்றி இயங்குகிறது என்று அறியாதவனுக்குத் தான் யாவன் என்பதும் உலகம் இத்தன்மையது என்பதும் தெரியாது. இவற்றில் ஒன்றேனும் அறியாதவனுக்குத் தான் எதற்காக