பக்கம்:இதய உணர்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இதய


தீச்செயல்களைச் சாந்தமாய்ப் பொறுத்துக் கொள்ளுதலே கடன்.

81

★ ★ ★

தீங்கிழைப்பவன் தனக்கே தீங்கிழைக்கிறான். அநீதி

செய்பவன் அதனால் தன்னையே கெட்டவனாக்கிக் கொள்வதால் தனக்கே அநீதி செய்துகொள்கிறான்.

82

★ ★ ★

ருவன் செய்யத் தக்கவைகளைச் செய்யாமையாலும் அநீதி செய்கிறான், செய்யத் தகாதவைகளைச் செய்வதாலும் அநீதி செய்கிறான்.

82

★ ★ ★

ன்னுடைய தற்கால அபிப்பிராயம் அறிவை ஆதாரமாகக் கொண்டதாயும், உன்னுடைய நடத்தை சமூகத்தின் நன்மையை நாடியதாயும், உன்னுடைய மனப்பாங்கு எது நடந்தாலும் சம நிலைமையை விட்டு மாறாததாயும் இருப்பின் அதுவே போதும்.

82

★ ★ ★

ரேவித குணமுடையவைகள் எல்லாம் தங்களைப் போலொத்த குணமுடையவைகளோடு சேர்வதே இயற்கை. மண் மண்ணோடும், நீர் நீரோடும், காற்று காற்றோடும் சேர விரும்புகின்றன. அவைகளைப் பிரித்து வைக்க விரும்பினால் அதற்குப் பலாத்காரம் தேவை.

பதார்த்தங்களும் ஜந்துக்களும் எவ்வளவுக்கு உயர்ந்தவையா யிருக்கின்றனவோ அவ்வளவுக்குத் தங்களைப் போன்றவைகளோடு இயையும் தன்மையுள்ளனவா யிருக்கின்றன. கற்களைவிட மரங்களிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/48&oldid=1105927" இலிருந்து மீள்விக்கப்பட்டது