பக்கம்:இதய உணர்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உணர்ச்சி

47


மரங்களைவிட மிருகங்களிலும், மிருகங்களைவிட மனிதர்களிலும் இத்தன்மை மிகுந்து விளங்குகின்றது. மிக உயர்ந்தவைகள் பிரிந்தே யிருந்தாலும் அவைகளிடத்தில் ஒற்றுமை இருக்கவே செய்கின்றது. ஆகையால் மனிதர்களிடம் இக்குணம் கட்புலனாகாவிடினும், அவர்கள் வேண்டுமென்று அக்குணத்தை ஒழிக்க முயன்றாலும், அக்குணம் அவர்களைப் பிணித்தே நிற்கின்றது. மக்கள் இயல்பு அவர்களிலும் வலிது. கவனித்துப் பார்த்தால் மண் மண்ணோடு சேராமலிருக்கலாம், ஆனால் மனிதன் மனிதனை விட்டு அறவே பிரிந்திருக்க முடியாது என்பது தெளிவாய் விளங்கும். 85

உன்னால் கூடுமானால் குற்றம் செய்பவரை உபதேச மூலமாக நன்னெறியில் உய்ப்பாய்

உன்னால் கூடாதனால்,பிறர் குற்றத்தைப் பொறுப்பதற்காகவே உனக்குத் தயை என்னும் குணம் கொடுக்கப் பெற்றிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்.

கடவுளரும் அத்தகையோர்க்குத் தயை காட்டுகின்றனர். சில காரணத்தை யிட்டுத் தேக சுகம், செல்வம் முதலியன கிடைக்கும்படி உதவியும் செய்கின்றனர். அவர்கள் அவ்வளவு அன்புடன் இருக்கின்றனர். உனக்கும் அப்படியிருக்கச் சக்தியுண்டு, உன்னைத் தடுப்பவர் யார், சொல்வாய் ? 86


இன்று துன்பத்தினின்று விலகிக்கொண்டேன் - அப்படியன்று - துன்பத்தை விலக்கிவிட்டேன், ஏனெனில் துன்பம் எனக்கு வெளியே இருக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/49&oldid=1156097" இலிருந்து மீள்விக்கப்பட்டது