பக்கம்:இதய உணர்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இதய


என் அபிப்பிராயங்களால் என்னகத்தேதான் உண்டாயிருந்தது.

87

★ ★ ★

நீ வேலை செய்யும்போது கதியற்றவன்போலச் செய்யாதே. பிறர் உன்மேல் இரங்கவேண்டுமென்றாவது, அல்லது உன்னைப் போற்றவேண்டு மென்றாவது செய்யாதே. பொது வாழ்விற்குத் தக்கதைச் செய்வதும் தகாததைச் செய்யாதிருப்பதுமே உன் மனத்தைச் செலுத்தவேண்டிய விஷயமாகும்.

88

★ ★ ★

னிதர்களுடைய மூலாதாரக் கொள்கைகளை ஆழ்ந்து நோக்கு. அப்பொழுது எத்தகைய நியாயாதி பதிகளுக்கு நீ பயப்படுகிறாய் என்பதையும், தங்களுக்கே அவர்கள் எத்தகைய நியாயாதிபதிகளா யிருக்கின்றனர் என்பதையும் எளிதில் அறிந்துகொள்வாய்.

89

★ ★ ★

ருவன் குற்றம் செய்தால் அதனால் வரும் கேடு அவனுடையதே. ஒருவேளை அவன் குற்றமே செய்யாமலு மிருக்கலாம்.

90

★ ★ ★

தேவர்களுக்குச் சக்தியுண்டா, இல்லையா ? சக்தி இல்லையானால் அவர்களை நோக்கி ஏன் பிரார்த்தனை செய்கிறாய்? சக்தி இருக்குமானால் பயமும், ஆசையும், கிலேசமுமின்றி யிருக்கச் சக்தியளிக்கும்படி பிரார்த்தனை செய்வதை விட்டு, உனக்கு ஏதாவது வேண்டும் அல்லது வேண்டாம் என்று ஏன் பிரார்த்தனே செய்கிசெய்கிறாய்?

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/50&oldid=1105985" இலிருந்து மீள்விக்கப்பட்டது