உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இதய


ருவனை நன்றி கெட்டவன் என்று சொல்வதற்கு முன், உன் இதயத்தையே சோதித்துப் பார். ஒருவனுக்கு நன்மை செய்யும் பொழுது கைம்மாறு கருதாமல் செய்திருக்க வேண்டும். அல்லது நீ விரும்பும் சகல லாபமும் நீ செய்யும் காரியத்தாலேயே உனக்குக் கிடைக்கக்கூடிய முறையில் அதைச் செய்திருக்க வேண்டும். அவ்வாறில்லையாயின் குற்றம் உன்னுடையதே.

மேலும் ஒருவனுக்கு நீ ஒரு நன்மை செய்த பிறகு உனக்கு வேறென்ன வேண்டும்? மெய் இயல்புக்கு ஒத்த காரிய மொன்றைச் செய்துவிட்டோம் என்று உனக்குத் திருப்தி ஏற்படவில்லையா? கண் பார்ப்பதற்கும், கால் நடப்பதற்கும் கூலி விரும்பினாற் போல நீயும் அதற்குக் கூலியும் விரும்புகிறாயோ? இந்த உறுப்புக்கள் எந்தக் காரியத்துக்காகச் சிருஷ்டிக்கப்பட்டனவோ அந்தக் காரியத்தைச் செய்வதிலேயே பலனடைகின்றன. அது போல் மனிதனும் பிறர்க்கென வாழவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறான், பிறர்க்கென வாழ்வதிலேயே பலனடைகிறான்.

93

★ ★ ★

ருவன் தவறு இழைத்தால் அவன் குற்றத்தை அவனுக்கு அன்புடன் உணர்த்து. உன்னால் முடியாவிட்டால் உன்னையே குறைகூறிக்கொள். அல்லது

உன்னைக் கூடக் குறைகூறிக் கொள்ளாதே.

94

★ ★ ★

லகில் சகல பொருள்களும் ஒன்று மற்றொன்றாய் மாறி வருகின்றது என்று இடைவிடாது சிந்தனை செய். அதனால் பெருந்தகைமை பிறக்கும். அவ்வாறு சிந்தித்து வரும் மனிதன் சரீர ஞாபகமே இல்லாமற் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/52&oldid=1105996" இலிருந்து மீள்விக்கப்பட்டது