பக்கம்:இதய உணர்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

இதய


“இலைகளைக் காற்று நிலத்திடை யுதிர்க்கும் ;

அவ்விதமே மனிதரும். ”

98

★ ★ ★

நோயற்ற கண், நோக்குவதற்கு உரிய அனைத்தையும் நோக்கவேண்டும். கேடற்ற காது, கேட்பதற்கு உரிய அனைத்தையும் கேட்கவேண்டும். அதுபோல் செம்மையான அறிவு, அறிதற்கு உரிய அனைத்தையும் அறியவேண்டும். அப்படிக்கன்றி, “என் அருமை மக்கள் நெடுங்காலம் வாழ்க, என்னை மனிதர் அனைனவரும் புகழ்க” என்று வேண்டும் அறிவானது, “பசுமையான பொருள்களையே பார்ப்பேன்” என்னும் கண்ணையும், “மிருதுவான பொருள்களை மட்டுமே மெல்லுவேன் ’’ என்னும் பல்லையும் ஒக்கும்.

99

★ ★ ★

ரு மரக்கொம்பு ஒரு கிளையினின்று வெட்டப்பட்டாலும், முழு மரத்தினின்றும் வெட்டப்பட்டதேயாகும். அதுபோல் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை விட்டுப் பிரிந்தாலும், ஜன சமூகத்தை விட்டுப் பிரிந்தனே யாவான். ஆனால் மரக்கொம்பை மரக்கொம்பே வெட்டுவதில்லை; அதற்கு புறம்பான மனிதன் ஒருவன் வெட்டுகிறான். மனிதனோ மற்றொருவனிடத்தினின்று தானாகவே அவனைப் பகைத்து வெறுப்பதன் மூலமாய்ப் பிரிந்து கொள்கிறான். எனினும் அவன் ஜன சமூகத்தையும் விட்டுத் தான் பிரிந்துதுவிட்டதாக உணர்வதில்லை. ஆயினும் எதனின்று பிரிகிறேமோ அதனோடு சேர்ந்து ஒன்றாவதற்குகுரிய சக்தியைக் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். ஆனால், பிரிவதும் சேர்வதும் அடிக்கடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/54&oldid=1106001" இலிருந்து மீள்விக்கப்பட்டது